Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா வேகம்! ஆப்கானிஸ்தான் வீரரின் காலை உடைத்த ஷாகின் ஆப்ரிடி..மைதானத்திலிருந்து தூக்கி செல்லபட்டார்

பிரிஸ்பேன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஆப்ரிடி அட்டகாசமாக பந்துவீசி அசத்தினார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இரு அணிகளும் கடந்த முறை ஆசிய கோப்பை போட்டியில் மோதிய போது,இரு அணிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் தான் என்று பாகிஸ்தான் வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.

கடந்த கால பகை

கடந்த கால பகை

இதனிடையே, இவ்விரு அணிகளும் மீண்டும் பயிற்சி ஆட்டத்தில் மோதின. இது சாதாரண போட்டியாக இருந்தாலும், கடந்த கால பகை காரணமாக, இது ஒரு முக்கிய போட்டி போல் ரசிகர்கள் கவனம் செலுத்தினர். இன்றைய ஆட்டத்தில் ஷாகின் ஆப்ரிடி எப்படி பந்துவீசப் போகிறார் என்று ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டனர்.

யாக்கர்

யாக்கர்

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசிய ஷாகின் ஆப்ரிடி விக்கெட் ஏதும் கைப்பற்மல் 7 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். இன்றைய ஆட்டத்திலும் முதல் ஓவரை ஷாகின் ஆப்ரிடி வீசினார். இதில் ஆட்டத்தின் 4வது பந்தை குர்பாஸ்க்கு ஆப்ரிடி வீசினார். அசுர வேகத்தில் பேட்ஸ்மேனின் காலை அந்த பந்து பதம் பார்த்தது.

பேட்ஸ்மேன் காயம்

பேட்ஸ்மேன் காயம்

இதற்கு நடுவர்கள் எல்பிடபிள்யூ கொடுத்தனர். அப்போது குர்பாஸ் வலியால் துடித்தார்.அவரால் நடந்து பெவிலியனுக்கு கூட செல்ல முடியவில்லை. இதனையடுத்து சக நாட்டு வீரர், குர்பாஸை தோளில் சுமந்து பெவிலியனுக்கு அழைத்து சென்றார். தற்போது குர்பாஸ், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஸ்கேன் பரிசோதனை நடக்கப்பட உள்ளது.

2 ஓவரில் 2 விக்கெட்

2 ஓவரில் 2 விக்கெட்

இதில் எலும்பு முறிவு அல்லது தெறிப்பு ஏற்பட்டு இருந்தால், அவர் டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்படும். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய ஷாகின் ஆப்ரிடி , ஹசரத்துல்லாவை 9 ரன்களில் கிளின் போல்ட் ஆக்கினார். இதுவரை 2 ஓவர் வீசிய ஷாகின் ஆப்ரிடி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Wednesday, October 19, 2022, 10:40 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+