For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

PakvSL- 23 வயதில் ஷாகின் ஆப்ரிடி பிரம்மாண்ட சாதனை.. வசீம் அக்ரம், வாக்கர் யூனிஸ் உடன் இணைந்த ஆப்ரிடி

காலே : இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகின் அப்ரிடி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் நிஷாந்த் மதுசங்கா விக்கெட்டை சாகின் ஆப்ரிடி ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் வீழ்த்தினார்.

Shaheen shah afridi reached biggest milestone at the age of 23

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 18 வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்த சாதனையை அவர் 23 வயதினிலே நிகழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜாம்பவான்களான வக்கார் யூனிஸ், வசிம் அக்கரம் ஆகியோர் பட்டியலில் ஷாகின் ஆப்ரிடியும் இணைந்துள்ளார். இந்த மூவரும் 23 வயதிலேயே 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள்.

ஷாகின் ஆப்ரிடி கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கால் வைத்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் 25 டெஸ்ட், 36 ஒரு நாள் மற்றும் 52 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 234 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 23 வயதிலேயே இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப் பெரிய ரெக்கார்டை ஷாகின் ஆப்ரிடி படைத்திருக்கிறார்.

இதனால் ஷாகின் ஆப்ரிடி மிகப்பெரிய ரெக்கார்டுகளை உடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இன்னும் ஷாஹின் ஆப்ரிடி 10 ஆண்டுகள் விளையாடினால் நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக 460 போட்டிகளில் விளையாடி 916 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த ரெக்கார்டை ஷாகின் அப்ரிடி உடைப்பாரா இல்லையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Story first published: Sunday, July 16, 2023, 12:41 [IST]
Other articles published on Jul 16, 2023
English summary
Shaheen shah afridi reached biggest milestone at the age of 23 PakvSL- 23 வயதில் ஷாகின் ஆப்ரிடி பிரம்மாண்ட சாதனை.. வசீம் அக்ரம், வாக்கர் யூனிஸ் உடன் இணைந்த ஆப்ரிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+