Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் வாரியம் இவ்வளவு மோசமா??.. அஃப்ரிடி பரபரப்பு குற்றச்சாட்டு.. நம்.1 பவுலருக்கு நடந்த கொடுமை

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோசமாக நடந்துக்கொள்வதாக முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Recommended Video

T20 WorldCup Pakistan Squadல செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? *Cricket

டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஒவ்வொரு நாடும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடிய போதும், இறுதிப்போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்தது.

 டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது சாஹீன் அஃப்ரிடி இல்லாதது தான். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை. எனினும் தற்போது அறுவை சிகிச்சை செய்து பூரண குணமடைந்துள்ள அவர், மீண்டும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

சாஹித் அஃப்ரிடி பேச்சு

சாஹித் அஃப்ரிடி பேச்சு

இந்நிலையில் சாஹித் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் அநீதி செய்ததாக முன்னாள் வீரர் அஃப்ரிடி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், சாஹீன் அஃப்ரிடி அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள தனது சொந்த செலவில் தான் இங்கிலாந்து சென்றார். தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட், ஹோட்டல் அறை, அறுவை சிகிச்சை, உணவு என அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்துக்கொண்டார். பாகிஸ்தான் வாரியம் கைவிரித்தது.

கண்டுக்கொள்ளவே இல்லை

கண்டுக்கொள்ளவே இல்லை

அவரை பரிசோதிப்பதற்காக நான் ஒரு மருத்தவரை அவருக்கு பரிந்துரைத்தேன். அந்த மருத்துவர் மூலம் அவராகவே குணமடைந்து வந்தார். பாகிஸ்தான் வாரியம் எதையும் செய்யவில்லை, வாரியத்தின் இயக்குநர் ஜஹீர் கான் ஒரே ஒருமுறை மட்டும் தொலைபேசியில் அழைத்து பேசினார் என நினைக்கிறேன். நாட்டிற்காக விளையாடிய வீரருக்கு இதுதான் நிலைமை என குற்றம் சாட்டினார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

இதனை அறிந்த ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் வாரியம் விரைவில் பதில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 16, 2022, 21:47 [IST]
Other articles published on Sep 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+