For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பர் 1 ஆசை போச்சா..?? விராட் கோலியை வெளுத்து வாங்கிய பாக். வீரர் அஃப்ரிடி.. பதிலடி தருவாரா கிங்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சையது ஆஃபிரிடி கடுமையாக சாடியுள்ளார்.

உலகின் முன்னணி வீரரான விராட் கோலி, கடந்த இரண்டரை வருடங்களாக தனது ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் இழந்துவிட்டார்.

விராட் கோலி கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதம் அடித்திருந்தார். ஜோ ரூட் 17 சதங்கள் அடித்திருந்தார்.

தவறிய வாய்ப்பு

தவறிய வாய்ப்பு

ஆனால், தற்போது விராட் கோலி 27 சதத்தை தாண்டவில்லை. ஆனால் ஜோ ரூட் 27 ஐ தொட்டுவிட்டார். ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனையை கோலி தான் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி தற்போது பந்தயத்திலேயே இல்லை. எங்கேயோ இருந்து வந்த ரூட், சச்சின் சாதனையை நெருங்கி விட்டார்.

குடும்பத்தோடு நேரம்

குடும்பத்தோடு நேரம்

இதிலிருந்து விராட் கோலியின் இருப்பு தளர்ந்து விட்டது தெரிகிறது. அதுவும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட் கோலி , ஒரு சாதாரண வீரரை போல் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் என 341 ரன்கள் மட்டுமே கோலி அடித்திருக்கிறார். விராட் கோலி கிரிக்கெட்டை விட தற்போது குடும்பத்தோடு தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆஃபிரிடி கேள்வி

ஆஃபிரிடி கேள்வி

இங்கிலாந்து தொடருக்காக ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், விராட் கோலி மாலத்தீவில் குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகிறார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் ஆஃபிரிடி, விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளார். அதில், விராட் கோலிக்கு நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் போய்விட்டது.

நம்பர் 1 ஆசை இல்லையா?

நம்பர் 1 ஆசை இல்லையா?

முன்பு ஒரு காலத்தில் நம்பர் 1 வீரராக இருக்க வேண்டும் என்ற வெறி விராட் கோலிக்கு இருந்தது. தற்போதே அதே உத்வேகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்குள் வந்துவிட்டது. கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டோம்.இனி ஜாலியாக பொழுதை கழிக்கலாம் என்ற யோசனையில் விராட் கோலி உள்ளாரா என்று தெரியவில்லை. Attitude தான் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம் என்று ஆஃபிரிடி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 15, 2022, 18:43 [IST]
Other articles published on Jun 15, 2022
English summary
Shahid afridi blast virat kohli for his attitude over cricket நம்பர் 1 ஆசை போச்சா..?? விராட் கோலியை வெளுத்து வாங்கிய பாக். வீரர் அஃப்ரிடி.. பதிலடி தருவாரா கிங்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+