கிரிக்கெட் உலகை வியக்க வைக்கும் கோலியின் புதிய சாதனை.. முழு மனதுடன் பாராட்டிய பாக். வீரர் அப்ரிடி!
Recommended Video
மும்பை : விராட் கோலி தென்னாப்பிரிக்க தொடரில் பேட்டிங் மைல்கல் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
அதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷஹித் அப்ரிடி தன் பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார். அப்ரிடியின் டி20 சாதனை ஒன்றையும் கோலி சமன் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் கோலி அரைசதம் அடித்தார்.

இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

கோலி அசத்தல் ஆட்டம்
தவான் 40 ரன்கள் அடித்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே அடிக்க, கேப்டன் கோலி வழக்கம் போல நின்று ஆடினார். 52 ரன்களில் 72 ரன்கள் குவித்த அவர், வெற்றியை சாத்தியமாக்கினார்.

சராசரி உயர்வு
இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கோலி, தன் டி20 போட்டி சராசரியை 50க்கும் மேல் உயர்த்திக் கொண்டார். சில காலத்திற்குப் பின் கோலி மீண்டும் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் 50க்கும் மேல் பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.

ஐசிசி பாராட்டு
இந்த சாதனையை குறிப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டு தெரிவித்தது. அந்தப் பதிவில், டெஸ்ட் : 53.14, ஒருநாள் 60.31, டி20 50.65 என கோலியின் தற்போதைய பேட்டிங் சராசரியை குறிப்பிட்டு பாராட்டி இருந்தது.
அப்ரிடி என்ன சொன்னார்?
அதே பதிவை பகிர்ந்த அப்ரிடி, கோலியை பாராட்டி இருந்தார். "வாழ்த்துக்கள் கோலி. நீங்கள் மிகப் பெரிய வீரர். உங்கள் தோடர் வெற்றிகளுக்கு என் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டே இருங்கள்" என கூறினார்.

ஆட்டநாயகன் கோலி
இதே போட்டியில் 72 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார் கோலி. அதன் மூலம், அப்ரிடியின் டி20 சாதனை ஒன்றை சமன் செய்து இருக்கிறார்.

அப்ரிடி சாதனை சமன்
டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் 11 விருதுகளுடன் அப்ரிடியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டார் கோலி. முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி இருக்கிறார். அவர் 12 முறை டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications