Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஃபிரிடிக்கு மருமகனாகும் ஷாகின் ஆஃபிரிடி.. இஃப்தார் விருந்து கொடுத்து அசத்திய மாமனார்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாயின் ஆப்ஃரிடி, கிரிக்கெட் ஜாம்பவான் சையது அஃபிரிடி மகளை திருமணம் செய்ய உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து நாட்டு ரசிகர்களாலும் போற்றக் கூடியவர் சையது அஃபிரிடி. இவருக்கு இந்தியாவிலும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்

பாகிஸ்தான் அணிக்காக பல்வேறு போட்டிகளில் வென்று கொடுத்துள்ள ஆஃப்ரிடி ஐபிஎல் தொடரிலும் விளையாடி இருக்கிறார்.

ஷாகின் ஆஃப்ரிடி

ஷாகின் ஆஃப்ரிடி

இந்த நிலையில், ஆஃபிரிடி பெயரிலேயே கிரிக்கெட்டுக்கு வந்த மற்றொரு வீரர் தான் ஷாயின் ஷா ஆஃப்ரிடி. தனது அசுரத்தனமான வேகப்பந்துவீச்சால் பிரபலமானவர். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர். என்ற பெருமையையும் பெற்றார். இவரது பந்துவீச்சால் தான் கடந்த டி20 உலககோப்பையில் முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது.

திருமணம்

திருமணம்

சையிது ஆஃப்ரிடிக்கும் ஷாகின் ஆஃப்ரிடிக்கும் ஒரே பெயர் இருப்பதால் இருவரும் உறவினர்கள் என்று ரசிகர்கள் நினைத்தது உண்டு. ஆனால் இருவருக்கும் இதற்கு முன்பு வரை தொடர்பு இல்லை. ஆனால் ஆப்ரிடி தனது மகளை ஷாயின் ஷா ஆப்ரிடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தார். இது குறித்து வெளிப்படையாகவே ஆப்ரிடி அறிவித்தார்.

இஃப்தார் விருந்து

இஃப்தார் விருந்து

இறைவன் நாடினால் ஆப்ரிடி என் மருமகனாக வருவார் என்று கூறினார். இந்த நிலையில், ரமலான் நோன்பின் போது, விரதத்தை முடிக்க இஸ்லாமியர்கள் நடந்தும் இஃப்தார் விருந்தை சீனியர் ஆப்ஃரிடி தனது வீட்டில் நடத்தினார். இதில் தனது மருமகனாக வர உள்ள ஷாயின் ஷா ஆப்ரிடி மட்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆஃப்ரிடி உருக்கம்

ஆஃப்ரிடி உருக்கம்

இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஆஃப்ரிடி வெளியிட்டதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது தொடர்பாக ஆஃபிரடி வெளியிட்டுள்ள பதிவில், நோன்பு முறிக்கும் நேரத்தில் நாம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் அது நடக்கும். பாகிஸ்தான் மக்கள் வாழ்வில் அமைதி நிலைநாட்ட நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று ஆஃப்ரிடி அதில் உருக்கமாக குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, April 13, 2022, 21:25 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+