Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரட்டல் அடி.. வயசானாலும் இன்னும் அதே பூம் பூம் அப்ரிடி தான்.. என்ன ஸ்ட்ரைக் ரேட் தெரியுமா?

பிராம்ப்டன் : முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 39 வயதிலும் அதிரடி ஆட்டம் ஆடி தன் இளமைக் கால பூம் பூம் அப்ரிடியை நினைவுக்கு கொண்டு வந்தார்.

கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில் பல நாடுகளை சேர்ந்த பிரபல வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். சமீபத்தில் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் கூட அந்த தொடரில் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணிக்காக ஆடிய அதிரடி ஆட்டம் ரசிகர்கள் இடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.

குளோபல் டி20 போட்டி

குளோபல் டி20 போட்டி

குளோபல் டி20 தொடரின் ஆறாவது போட்டியில் பிராம்ப்டன் வுல்வ்ஸ் - எட்மாண்டன் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிராம்ப்டன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் சிம்மன்ஸ் 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர்.

முதல் பந்திலேயே தாக்குதல்

முதல் பந்திலேயே தாக்குதல்

11வது ஓவரில் 97 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்த போது அப்ரிடி களமிறங்கினார். முதல் பந்து முதல் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்த அப்ரிடி, 40 பந்துகளில் 81 ரன்கள் குவித்து மிரட்டினார்.

அதிரடி ஸ்ட்ரைக் ரேட்

அதிரடி ஸ்ட்ரைக் ரேட்

அதில் பத்து ஃபோர், ஐந்து சிக்ஸ் அடங்கும். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார் அப்ரிடி. அவரது ஸ்ட்ரைக் ரேட் 202.50 என்பது பலருக்கும் வியப்பை அளித்தது. 39 வயதிலும் அப்ரிடி தன் அதிரடி ஆட்டத்தில் சற்றும் சறுக்காமல் ஆடியது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

எட்மாண்டன் ராயல்ஸ் தோல்வி

எட்மாண்டன் ராயல்ஸ் தோல்வி

பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 207 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய எட்மாண்டன் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முதல் பந்தில் விக்கெட்

முதல் பந்தில் விக்கெட்

பேட்டிங்கில் கலக்கிய அப்ரிடி பந்துவீச்சிலும் அசத்தினார். தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸின் விக்கெட்டை எடுத்தார். 81 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்த அப்ரிடி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Story first published: Monday, July 29, 2019, 18:22 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+