Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாகித் அப்ரிடி வீட்டில் விராட் கோலி டீசர்ட்.. இணையம் முழுக்க வைரலாகும் அந்த வீடியோ.. என்ன சிறப்பு!

Recommended Video

ஷாகித் அப்ரிடி வீட்டில் விராட் கோலி டீசர்ட்.. இணையம் முழுக்க வைரலாகும் அந்த வீடியோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் வீட்டில் இந்திய அதிரடி வீரர் விராட் கோலியின் ஜெர்சி இருந்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியில் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்தவர் ஷாகித் அப்ரிடி. இவர் அடிக்கடி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு மீண்டும் போட்டியில் விளையாடுவார்.

தற்போது மொத்தமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகளின் போது இவர் வர்ணனை செய்து வருகிறார்.

அரசியல்

அரசியல்

இவர் சமீப நாட்களாக அரசியல் ரீதியாக நிறைய கருத்துக்களை பேசி வருகிறார். இவர் பேசும் கருத்துக்களை சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறும். சமயங்களில் இவரின் கருத்துக்கள் நிறைய விமர்சனங்களை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்த நிலையில்தான் இவரின் வீடு குறித்த வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பொதுவாக இந்திய வீரர்கள் பிரம்மாண்டமாக வீடு காட்டுவார்கள் . அவர்களை பிணைப்புற்று கிட்டத்தட்ட 50 கோடி செலவில் அப்ரிடி வீடு ஒன்றை கட்டி உள்ளார்.

என்ன வீடியோ

இதன் வீடியோ தற்போது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. அந்த வீட்டின் ஷோ கேஸில் விராட் கோலியின் ஜெர்ஸியை அப்ரிடி மாட்டி வைத்துள்ளார். நீல நிற ஜெர்சி கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது 2016 டி 20 உலகக் கோப்பை போட்டியின் போது கோலி அப்ரிடிக்கு பரிசளித்த டீ சர்ட் ஆகும்.

எப்படி

எப்படி

இதில் அந்த போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் எல்லோரின் கையெழுத்தும் இருந்தது. இதைத்தான் அப்ரிடி தற்போது தன்னுடைய வீட்டில் கண்ணாடி பேழைக்குள் மாட்டி வைத்துள்ளார். போட்டியின் நினைவாக இதை அவர் வைத்துள்ளார். அவரின் இந்த பண்பு மக்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

Story first published: Tuesday, October 1, 2019, 12:47 [IST]
Other articles published on Oct 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+