Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்ப்பா தம்பி கையைப் புடுச்சு இழுத்தியா....?

அடிலைட்: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிவி வர்னணையாளர் மார்க் நிக்கோலஸைப் பார்த்து இனவாத வார்த்தையை அவர் பயன்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

ஆனால் தான் சொன்னது நிச்சயம் அப்படிப்பட்ட வார்த்தை இல்லை என்று அப்ரிடி மறுத்துள்ளார். உண்மையில் தான் என்ன சொன்னேன் என்பதே தனக்குத் தெரியவில்லை என்றும் அப்ரிடி கூறியுள்ளார்.

Shahid Afridi lands in controversy ahead of World Cup quarter-final

அயர்லாந்துடன் மார்ச் 15ம் தேதி நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மோதியது. போட்டி இடைவேளையில், அப்ரிடியை மார்க் நிக்கோலஸ் பேட்டி கண்டார். அப்போது நிக்கர் என்ற வார்த்தையை அப்ரிடி பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. கருப்பர் என்று பொருள்படும் படியான வார்த்தை இது.

இதனால் சர்ச்சை வெடித்துள்ளது. இருப்பினும் தான் அப்படிப் பேசவில்லை என்றும், தான் பேசியது சரியாக தனக்கே புரியவில்லை என்றும் அப்ரிடி மறுத்துள்ளார்.

அயர்லாந்து அணியை இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது நினைவிருக்கலாம்.

காலிறுதிப் போட்டியில் மார்ச் 20ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 17, 2015, 18:26 [IST]
Other articles published on Mar 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+