"அந்த" ஒரு இந்திய வீரர் பேட்டிங்கை.. மணிக்கணக்கா டிவியில் பார்ப்பேன் - ஒப்புக் கொண்ட அப்ரிடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி, அந்த ஒரேயொரு இந்திய வீரர் விளையாடினா மட்டும் தான் பொறுமையா உட்கார்ந்து பார்ப்பாராம்.
அப்ரிடி பற்றி பெரிதாக ரசிகர்களுக்கு ஒன்னும் சொல்லத் தேவையில்லை. அதிரடி வீரர். எப்போ எந்த நேரத்தில் இறங்கினாலும் Bat-ஐ சுழற்றுவதில் ஜித்து.
அது இக்கட்டான தருணமாக இருந்தாலும் சரி.. பிரஷர் இல்லாத நேரமாக இருந்தாலும் சரி.. எதைப்பற்றியும் கவலைப்படாமல், சிக்ஸருக்கே குறி வைப்பார். ஆனால், அந்த குறி பல நேரங்களில் ஃபிளாப் ஆகி, பாகிஸ்தான் சூடுபட்டுக் கொண்டது வேறு கதை. இருந்தாலும், பாகிஸ்தானின் லெஜண்ட் வீரர்களில் ஒருவர் அப்ரிடி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இன்சமாம், சயீத் அன்வர்
இந்நிலையில், அவர் எந்தெந்த கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங்கை பார்க்க விரும்புவார் என்று சமீபத்தில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அப்ரிடி, தான் ஆரம்பக் காலத்தில் இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வரிடன் பேட்டிங்கை மட்டுமே விரும்பிப் பார்த்ததாக கூறியுள்ளார். "எனது ஆரம்ப காலத்தைப் பற்றி பேசினால், இன்சமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வர் ஆகியோர் என்னைக் கவர்ந்த வீரர்கள். அவர்களின் விளையாட்டைப் பின்பற்றினேன். அவர்கள் விளையாடத் தொடங்கினால் டிவி முன்பு உட்கார்ந்து விடுவேன். நான் அவர்களுடன் விளையாட ஆரம்பித்தபோது என் கனவை நிறைவேற்றினேன். மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களைப் பற்றி பேசினால், பிரைன் லாரா மற்றும் க்ளென் மெக்ராத் என்னைக் கவர்ந்தவர்கள். அவர்கள் விளையாடும் போது கண் சிமிட்டாமல் பார்ப்பேன்.

ஃபக்கர் சமான்
இன்றைய தலைமுறை வீரர்களில், பாகிஸ்தான் அணியின் பாபர் அசம், ஃபக்கர் சமான் ஆகியோரின் பேட்டிங்கை விரும்பிப் பார்க்கிறேன். பாபர் மிகச் சிறந்த வீரராக வலம் வருகிறார். ஃபக்கர் சமான் அபாரமான தொடக்கத்தை கொடுத்த பெரும்பாலான போட்டிகளில் பாகிஸ்தான் வென்றுள்ளது. ஆனால், பக்கர் இந்த கன்சிஸ்டன்சியை மெயின்டெய்ன் பண்ண வேண்டும். மற்ற அணிகளில் ஏபி டிவில்லியர்ஸ் என்னை மிகவும் கவர்ந்த வீரர்.

ஓ.. அவர் தானா!
இந்தியாவை பொருத்தவரை "விராட் கோலி" தனது ஃபேவரைட் என்று அப்ரிடி கூறியிருக்கிறார். கோலியின் ஆட்டம் பிரமிக்கத்தக்க இருப்பதாகவும் அப்ரிடி தெரிவித்துள்ளார். அப்போ, சச்சின், கங்குலி, டிராவிட், தோனி போன்றவர்கள் பற்றி அப்ரிடி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. குறிப்பாக, ஒரு கேப்டனாக தோனியை எப்போதும் பாராட்டி வந்தவர் அப்ரிடி. எனினும், பேட்டிங் என்று வரும் போது விராட் கோலி தனது ஃபேவரைட் என்று கூறியிருக்கிறார்.

கட்டாய வெற்றி நோக்கி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்நோக்கியுள்ளது. ஆகஸ்ட்-4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், WTC ஃபைனல் தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications