கம்பீரை பைத்தியம்னு திட்டிட்டு.. இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசறீங்களே அப்ரிடி!
Recommended Video
இஸ்லாமாபாத் : பிரபல முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, கௌதம் கம்பீருக்கும், தனக்கும் இடையே எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
கடந்த சில நாட்கள் முன்பு வரை அப்ரிடி - கம்பீர் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி சமூக வலைதளங்களில் திட்டி வந்தனர். இந்த சூழ்நிலையில், அப்ரிடி இருவருக்கும் இடையே எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என கூறியுள்ளார்.

அப்ரிடி தன் சுயசரிதை புத்தகத்தில் கம்பீர் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார். இந்தியாவில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் அப்ரிடி - கம்பீர் இருவரும் களத்தில் மோதிக் கொண்டனர். அப்போது அம்பயர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
அது குறித்து தன் புத்தகத்தில், "அம்பயர் வந்து முடித்து வைத்திருக்காவிட்டால், நானே முடித்திருப்பேன்" என மிரட்டல் பாணியில் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கம்பீர் ஒரு ஆளே இல்லை என்பது போல கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து, கம்பீர் ட்விட்டரில் அப்ரிடி ஒரு பைத்தியம். இந்தியாவுக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தாக்கிப் பேசினார். பதிலுக்கு, அப்ரிடி, கம்பீர் மனநிலையை சரியாக்க பாகிஸ்தான் வந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பேன் என கூறினார்.
இப்படி இருவரும் மோசமாக தனிநபர் தாக்குதல் நடத்திய நிலையில், அப்ரிடி, இருவருக்கும் இடையே எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். நம்பிட்டோம்.. அப்ரிடி!!


Click it and Unblock the Notifications