Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி இன்னும் வளரணும்.. தோனி அளவுக்கு வொர்த் இல்லை.. சொல்கிறார் அப்ரிடி

மும்பை : முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி இந்திய அணியின் கேப்டன் கோலி பற்றி பேசியுள்ளார்.

கோலியின் தலைமை பற்றி அப்ரிடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அப்ரிடி தோனி அளவுக்கு கோலி இல்லை என கூறினார்.

கோலியின் கேப்டன் பொறுப்பு பற்றி சில காலமாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதில் அப்ரிடியின் இந்த கருத்தும் சேர்ந்துள்ளது.

கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்

கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்

கோலி ஒரு பேட்ஸ்மேனாக பட்டையைக் கிளப்பி வருகிறார். அவரது எதிரிகள் கூட அவர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என ஒப்புக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சாதனை மேல் சாதனையாக செய்து வருகிறார் கோலி. ஆனால், அவர் நல்ல கேப்டன் தானா? என்று கேட்டால் பலரும் ஒப்புக் கொள்வதில்லை.

அப்ரிடி கருத்து என்ன?

அப்ரிடி கருத்து என்ன?

அப்ரிடி கூறும் போது, "ஒரு வீரராக கோலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். ஆனால், ஒரு கேப்டனாக அவர் இன்னும் நிறைய வளர வேண்டும். என்னை பொறுத்தவரை தோனி தான் சிறந்த கேப்டன்" என தெரிவித்தார்.

கேப்டன் கோலியின் சொதப்பல்

கேப்டன் கோலியின் சொதப்பல்

அப்ரிடி உட்பட அனைவரும் கோலியை பற்றி இப்படி கூறக் காரணம், கேப்டனாக அவருடைய திட்டங்கள், கள செயல்பாடுகள் எதுவும் பாராட்டும் வகையில் அமையவில்லை. கோலிக்கு இன்னும் பீல்டிங் நிறுத்த வரவில்லை, டிஆர்எஸ் ரிவ்யூக்கள் கேட்பதிலும் சொதப்புகிறார், பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் சரியான திட்டம் இல்லை என கோலியின் பலவீனம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

கேப்டன் பொறுப்பில் தோனி எப்படி?

கேப்டன் பொறுப்பில் தோனி எப்படி?

தோனி கேப்டன் பொறுப்பில் பிரித்து மேய்ந்தவர். எந்த போட்டியிலும் அவரது திட்டங்கள் தனியாக தெரியும். போட்டிக்கு முன்னர் மிகவும் எளிதான வியூகங்கள் வகுத்து விட்டு, போட்டி நடக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவார் தோனி. இந்த திறமை அனைத்து கேப்டன்களுக்கும் வந்துவிடாது. கோலிக்கு முன் இருந்த கேப்டன் தோனி அத்தனை உயரத்தில் இருந்தவர் என்பதால், கோலியின் சொதப்பல்கள் அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது.

Story first published: Saturday, November 24, 2018, 18:39 [IST]
Other articles published on Nov 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+