Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு பெரிய ஜேம்ஸ்பாண்ட் - பிராட்மேன்னு நினைப்பு.. கம்பீரை அநாகரீகமாக கிண்டல் செய்த அப்ரிடி!!

டெல்லி : முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி தன் சுயசரிதை புத்தகத்தில், முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீரை கடுமையாக கிண்டல் செய்தும், எல்லை மீறி விமர்சித்தும் இருக்கிறார்.

அப்ரிடி - கெளதம் கம்பீர் இடையே உள்ள பகை பலரும் அறிந்ததே. 2007இல் கான்பூர் ஒருநாள் போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவரை களத்தில் திட்டிக் கொண்டனர். அப்போது முதல், எங்கேயும், எப்போதும் இருவரும் சுமூகமாக நடந்து கொண்டதில்லை.

கம்பீர் குறித்து கிண்டல்

கம்பீர் குறித்து கிண்டல்

அப்ரிடியின் சுயசரிதை புத்தகமான "கேம் சேஞ்சர்"-இல் கம்பீர் குறித்து வெளிப்படையாக விமர்சித்து, கிண்டல் செய்து எழுதியுள்ளார். அவற்றில் சில இங்கே - "சில பகைகள் தனிப்பட்ட முறையில் இருக்கும். சில தொழில்முறையில் இருக்கும். முதலில் கம்பீர். ஓ.. பாவப்பட்ட கௌதம்.. அவரும், அவரது நடத்தை பிரச்சனையும்"

அவர் ஒரு ஆளே இல்லை

அவர் ஒரு ஆளே இல்லை

"அவருக்கு எந்த தனித்தன்மையும் கிடையாது. மிகப் பெரிய கிரிக்கெட் உலகில், அவர் ஒரு கதாபாத்திரமே (ஆளே!) இல்லை. அவருக்கு பெரிய சாதனைகள் எதுவும் இல்லை, வெறும் நடத்தைகள் மட்டுமே அதிகம்" இப்படி தான் கம்பீர் பற்றி தன் புத்தகத்தில் துவங்கியுள்ளார் அப்ரிடி. தொடர்ந்து மோசமாக விமர்சித்துள்ளார்.

அன்று நடந்தது என்ன?

அன்று நடந்தது என்ன?

2007 கான்பூர் ஒருநாள் போட்டியில் நடந்த மோதலின் போது என்ன நடந்தது என்பது குறித்தும் அப்ரிடி கூறியுள்ளார். "2007 ஆசிய கோப்பையில், கம்பீருடன் நான் மோதிக் கொண்டது குறித்து நினைவில் உள்ளது. அவர் ஒரு ரன் ஓடி விட்டு நேராக என்னிடம் வந்து மோதினார். அம்பயர்கள் அதை முடித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அப்படி இல்லை என்றால் "நானே முடித்திருப்பேன்". தெளிவாக நாங்கள் இருவரும், எங்கள் பெண் உறவினர்கள் குறித்து (கெட்ட வார்த்தையில்) இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினோம்"

பாண்ட் - பிராட்மேன்

பாண்ட் - பிராட்மேன்

மேலே கூறிய எல்லாவற்றையும் விட இது தான் உச்சகட்ட தாக்குதல். "ஜேம்ஸ் பாண்ட் - டான் பிராட்மேனுக்கு இடையே (cross) வந்தவர் போல நடந்து கொள்வார் கம்பீர். கராச்சியில் இது போன்ற ஆள்களை "சர்யல்" (எரிச்சல்காரன்) என அழைப்போம்" என கூறியுள்ளார். மேலும், கம்பீர் நேர்மறை எண்ணம் கொண்டவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

அநாகரீகம்

அநாகரீகம்

ஆயிரம் சண்டை, சச்சரவு இருந்தாலும், சுயசரிதை புத்தகத்தில் இந்த தனிநபர் தாக்குதல் அவசியமா? அப்ரிடி என்ன நடந்தது எனக் கூறியதோடு நிறுத்திக் கொண்டு இருக்கலாம். தான் கம்பீரை பற்றி என்ன நினைத்தேன் என கூறி, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் என்பதே உண்மை.

Story first published: Friday, May 3, 2019, 16:01 [IST]
Other articles published on May 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+