Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடி முட்டாள்கள் அவர்கள்”.. சொந்த நாட்டு அணியையே விமர்சித்த சாஹித் அஃப்ரிடி.. அப்படி என்ன கோபம்!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை, அந்நாட்டின் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடியே மோசமாக விமர்சித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

பாபர் அசாம் தலைமையில், டி20 கிரிக்கெட், 50 ஓவர், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 அஃப்ரிடி விமர்சனம்

அஃப்ரிடி விமர்சனம்

இந்த சூழலில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அஃப்ரிடி, அந்நாட்டின் வீரர்கள் தேர்வு அடி முட்டாள் தனமாக உள்ளதாக விமர்சித்துள்ளார். எந்தவொரு வீரரும் மிக எளிதாக பாகிஸ்தான் அணிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலை இருப்பதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 50ஓவர் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் வென்றது. இந்த தொடரில் 21 வயதே ஆகும் இளம் வீரர் முகமது ஹாரிஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பெரும் பேசுப்பொருளானது. முதல் போட்டியில் பேட்டிங் கிடைக்காமல் இருந்த ஹாரிஸ் அடித்த 2 போட்டிகளில் 6 மற்றும் டக் அவுட் மட்டுமே ஆனார்.

முட்டாள்தனமான முடிவு

முட்டாள்தனமான முடிவு

இதுகுறித்து பேசிய அஃப்ரிடி, பாகிஸ்தான் வாரியத்தில் அடி முட்டாள்களாக இருக்கின்றனர். 2 டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிவிட்ட காரணத்தால் ஒரு வீரரை நேராக ODI-க்குள் அனுப்புவதா?. பாகிஸ்தான் அணி தொப்பியை வாங்குவது அவ்வளவு சுலபமாகிவிட்டதா? தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டால், அதற்கடுத்த முன்னேற்றமாக ODI-க்குள் வரலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்தால் இதுதான் நடக்கும்.

சீனியர்களின் வாழ்கை

சீனியர்களின் வாழ்கை

இளம் வீரர்கள் அணிக்கு வரவேண்டும் என நானும் நினைக்கீறேன். ஆனால் அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட் அனுபவமாவது இருக்க வேண்டும். உள்நாட்டு தொடர்களில் அனுபவம் பெறட்டும். சஃப்ராஸ் கான், ரிஸ்வான் போன்றோர் உள்ள சூழலில் இளம் வீரரை கொண்டு வந்தால், முன்னணி வீரர்களின் கிரிக்கெட் வாழ்கை என்ன ஆவது என யோசிக்க வேண்டும் என அஃப்ரிடி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 16, 2022, 13:46 [IST]
Other articles published on Jun 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+