என்னங்க இப்படி பேசுறீங்க ? ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. ரமீஸ் ராஜாக்கு ஆஃப்ரிடி கண்டனம்
ராவல்பிண்டி : இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. தனது சொந்த நாட்டு ஆடுகளத்தையே , அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டி மீது பலரின் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அதனை எல்லாம் புல்டோசர் வைத்து இடிப்பது போன்ற பணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது

உள்ளூர் போட்டி
ராவல்பிண்டி மைதானம் எப்போதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சோயிப் அக்தர் உள்ளிட்ட பல வீரர்கள் அங்கிருந்து தான் வந்தனர். சமீபத்தில் ராவல்பிண்டியில் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் தொடரான குவாயித் ஈ அசமில், முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் ஒரு முறை தான் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 210, 188,269,384,278,185 ஆகிய ரன்கள் தான் முதல் இன்னிங்சில் அமைக்கப்பட்டது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகம்
அவ்வளவு ஏன் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட, எடுக்கப்பட்ட 20 விக்கெட்டில் 18 விக்கெட்டை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் எடுத்தனர். ஆனால், அதன் பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், தற்போது மட்டும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் ஆகும்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஷ் ராஜா ஆடுகளத்தால் தமக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் ஆடுகளம் எப்படி அமைக்க வேண்டும் என்ற யுத்திகளை கூட தமக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானில் நல்ல டெஸ்ட் ஆடுகளத்தை தயாரிக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்ரிடி கண்டனம்
ரமீஸ் ராஜாவின் இந்த கருத்துக்கு சையது ஆப்ரிடி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். ரமேஷ் ராஜாவின் பேச்சைக் கேட்டு எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட ஆப்ரிடி, இது போன்ற கருத்தை அவர் வொயில் இருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். ராவல்பிண்டியில் எப்போதும் ஆடுகளம் வேகப்பந்து கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய ஆப்ரிடி, நாம் தோற்று விடுவோம் என்பதற்காக ஏன் ஆடுகளத்தின் தன்மையை மாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications