Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானங்கள் கல்யாண மண்டபமாக மாறியது.. பாகிஸ்தானில் சோக காலம் நிலவியது.. சையது ஆப்ரிடி உருக்கம்

லாகூர் : பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் எல்லாம் திருமணம் நடைபெறும் இடங்களாக மாறியது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சையது ஆப்ரிடி தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் மெல்ல மெல்ல தொடங்குகிறது.

பாகிஸ்தானுக்கு வரவில்லை

பாகிஸ்தானுக்கு வரவில்லை

வரும் டிசம்பர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் விளையாட்டு உலகின் கருப்பு தினம் என்று கருதப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தீவிரவாத தாக்குதல் குறித்து சையது ஆப்ரிடி பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர், அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தானுக்கு வர சம்மதிக்கவில்லை.

கடினமான காலம்

கடினமான காலம்

இதனால் எங்கள் நாட்டு ரசிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடினமான காலம் அது. எங்கள் மைதானங்களில் ரசிகர்களுக்கு முன் நாங்கள் விளையாட விரும்பினோம். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை. எங்கள் மைதானங்கள் எல்லாம் திருமணம் மண்டபங்களாக மாறின.ஆனால் கடின முயற்சிக்குப் பிறகு தற்போது நிலைமை மெல்ல மெல்ல மாறிய வருகிறது.

நிலைமை மாறுகிறது

நிலைமை மாறுகிறது

இதற்கு அரசாங்கமும் , பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் காரணம். நாங்கள் வெளிநாட்டு தொடரில் விளையாட செல்லும் போது, அங்குள்ள கிரிக்கெட் வீரர்களை எங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும் படி பிரச்சாரம் மேற்கொள்வோம். அதற்கு நல்ல பாயனாக தற்போது பாகிஸ்தான் மீண்டும் கிரிக்கெட் திரும்பி இருக்கிறது. இது பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்படும் ஒரு நல்ல செய்தியாகும்.பாகிஸ்தான் விளையாட்டை நேசிக்கும் தேசம். நாங்கள் எங்கள் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஆடுவதை விரும்புகிறோம். கடினமான காலங்கள் தற்போது மாறிவிட்டது.

இந்தியாவின் எதிர்ப்பு

இந்தியாவின் எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு , இங்கிலாந்து ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் எல்லாம் வரத் தொடங்கியுள்ளன. இதனை தான் மக்கள் மிகவும் மிஸ் செய்தனர் என்று அப்ரிடி கூறியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று கூறியுள்ளதால் இருநாட்டுக்கும் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தங்கள் நாட்டில் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெறுவதை குறிப்பிடும் விதமாக ஆப்ரிடி இந்த பேட்டியை அளித்துள்ளார்.

Story first published: Wednesday, November 16, 2022, 21:13 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+