Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல அதை ஒழிச்சு விடுங்கப்பா.. முடியலை.. ஷாஹித் அப்ரிடி திடீர் போர்க்கொடி

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

Recommended Video

Shahid Afridi Asks stern action against Corruption in Pak Cricket

கிரிக்கெட் போட்டிகளில் ஊழல் செய்வோருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஹபீஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக தற்போது அப்ரிடி குரல் கொடுத்துள்ளார்.

மேலும் பிஎஸ்எல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு தடை விதிக்கப்பட்ட சர்ஜீல் கான் என்ற வீரரை பாகிஸ்தான் அணியில் சேர்க்கும் முடிவுக்கும் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார். பிஎஸ்எல் போட்டித் தொடரில் தான் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டவர் சர்ஜீல் கான். இதையடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

முடிவடைந்த தடைக்காலம்

முடிவடைந்த தடைக்காலம்

தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அவரை தேசிய அணியில் சேர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதான் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், இதெல்லாம் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். இது நடக்கக் கூடாது. இதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்

இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், யாருக்கும் எதிரானவன் நான் இல்லை. ஆனால் கிரிக்கெட் வாரியம் சரியான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என்றார் அப்ரிடி. இதற்கிடையே அப்ரிடி தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த உமர் குல் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது அப்ரிடிக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

உமர் குல் குறித்து அதிருப்தி

உமர் குல் குறித்து அதிருப்தி

அப்ரிடி கேப்டனாக இருந்தபோது தொடர்ந்து உமர் குல்லை அணியில் சேர்த்து வந்தவர். அவரை முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுத்தவர். அப்படிப்பட்ட உமர் குல் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊழல் தடுப்பு விதிமுறைகளை அவர் மீறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. இப்படி ஒரு சர்ச்சையில் உமர் குல் சிக்கியிருப்பது வருத்தம் தருகிறது. அவர் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

படிப்பறிவு தேவை

படிப்பறிவு தேவை

அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன். ஆனால் இது மட்டும் அவருக்கு எப்போதும் கூட வராது, உதவாது. அவர் சில செயல்களைச் செய்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அப்ரிடி. மேலும் அவர் கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் படிக்காதவர்கள். அவர்கள் அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள். எனவே அவர்களுக்கு தேவையான போதனை முறைகளையும் கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஊழலில் அவர்கள் சிக்காமல் தப்ப முடியும். தடுக்க முடியும் என்றார் அவர்.

Story first published: Friday, April 3, 2020, 20:30 [IST]
Other articles published on Apr 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+