Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்மாவா... அப்பாவா... யாரை பிடிக்கும்? தன்னுடைய பதிலால் ரசிகர்களை கொள்ளைகொண்ட நடிகர்

மும்பை : பிடித்த கிரிக்கெட் வீரராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தன்னுடைய க்யூட் பதிலால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாகித் கபூர், அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியா அல்லது எம்எஸ் தோனியா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்பாவா அல்லது அம்மாவா பிடித்தவர்கள் என யாரை தேர்ந்தெடுப்பது என்று மேற்கண்ட கேள்விக்கு அவர் பதிலளித்து ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கேப்டன்கள்

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கேப்டன்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த 8 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காமல் உள்ளார். ஐபிஎல் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டில் இவரது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா காரணமாக ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீப காலங்களில் கேப்டன் விராட் கோலி, சிறப்பான ஆட்டங்களை தர தவறியுள்ளார்.

வெற்றிப்படம் 'கபீர் சிங்'

வெற்றிப்படம் 'கபீர் சிங்'

பாலிவுட்டின் சிறப்பான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஷாகித் கபூர். இவர் சிறப்பான பல படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள கபீர் சிங், வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில்

இதனிடையே, டிவிட்டர்மூலம் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் அவருக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் தோனியா அல்லது விராட் கோலியா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

ஷாகித் கபூர் எதிர் கேள்வி

ரசிகரின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஷாகித் கபூர், அம்மாவா, அப்பாவா யாரை பிடித்தவர் என்று சொல்ல முடியும் என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார். இதன்மூலம் தோனி மற்றும் கோலி இருவரும் இந்திய அணி என்ற குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று பொருள்படும்படி இவர் பதில் கேள்வி கேட்டுள்ளார்.

ஐபிஎல் தள்ளி வைப்பு

ஐபிஎல் தள்ளி வைப்பு

கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் கிரிக்கெட்டை முடக்கியுள்ளது. இதேபோல இந்தியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஒருசில வீரர்கள், நிலைமையை உணர்ந்து, தனிமையிலும், குடும்பத்தினருடனும் இனிமை காண முற்பட்டு வருகின்றனர். சிலர் தவித்து தான் போயுள்ளனர்.

Story first published: Wednesday, March 25, 2020, 18:56 [IST]
Other articles published on Mar 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+