Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கோப்பையை வென்ற கேகேஆர்: தைய்யா தக தைய்யான்னு ஆடிய ஷாருக்கான்

பெங்களூர்: ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வென்றதும் அதன் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் குஷியில் மைதானத்தில் டான்ஸ் ஆடினார்.

ஐபிஎல் 7வது சீசனின் இறுதி ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. கடந்த சீசனிலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தான் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Shahrukh Khan revels in Kolkata Knight Riders’ IPL 2014 victory

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதும் அதன் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் தனது இருக்கையில் இருந்து துள்ளி குதித்து எழுந்தார். குஷியில் மைதானத்தில் டான்ஸ் ஆடினார். அவர் தில் சே இந்தி படத்தில் வரும் சைய்ய சைய்யா பாடலுக்கு அதாவது உயிரே படத்தில் வரும் தைய்ய தைய்யா பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.

இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

நாட்டில் உள்ள அதிலும் குறிப்பாக கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதி போட்டியை நேரில் பார்க்க வந்த பெங்களூர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Story first published: Monday, June 2, 2014, 14:58 [IST]
Other articles published on Jun 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+