Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2019: ரசலை பத்தி இப்பவாவது தெரிஞ்சுக்கீட்டீங்களா….!! ஷாருக்கானின் வைரல் டுவிட்டர்

கொல்கத்தா: ரசலை பற்றி உங்கள் யாருக்கும் தெரியவில்லை என்று கொல்கத்தா அணி வீரர் ரசலின் ஆட்டம் குறித்து ஷாருக் கான் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 205 ரன்களை எடுத்தும் கோலியின் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 பந்துகளை மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது.

பெங்களூருக்கு தான் வெற்றி என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களை, கொல்கத்தா வீரர் ரசல் தமது அதிரடி ஆட்டத்தால் சின்னாபின்னமாக்கினார். அவரது காட்டடியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

அந்த வெற்றி குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள், வாழ்த்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் புகழ்ந்துள்ளார்.

பாராட்டிய ஷாருக்

தமது ட்விட்டர் பக்கத்தில் ரசலை பாராட்டி தள்ளியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

க்ரிஸ் லின், நிதிஷ் ரானா, ராபின் உத்தப்பா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மொத்தமுமே சிறப்பாக ஆடினீர்கள். ஒவ்வொருவருமே சிறப்பாக செயல் பட்டீர்கள். ஆனால் என்ன வார்த்தைகள் சொன்னாலும் அது இந்த படத்துக்கு ஈடாகாது என்பதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று ஷாருக் கான் கூறி இருக்கிறார்.

பாகுபலி படம்

பாகுபலி படத்தில் இடம்பெற்ற பிரபாஸின் புகைப்படத்தில், ரசலின் புகைப்படத்தை மாற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த ட்வீட்டை மேற்கொளிட்டு 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அருமையாக விளையாடினீர்கள் கொல்கத்தா அணி. ஜெய் மகிழ்மதி. இந்த உற்சாகத்தை அப்படியே தொடருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, April 6, 2019, 13:57 [IST]
Other articles published on Apr 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+