For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. பாகிஸ்தான் வீரர் ஷகில் இரட்டை சதம்.. தோல்வியை தவிர்க்குமா SL?

காலே : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் நிஷாந்த் மதுசங்கா 4 ரன்களிலும், கேப்டன் கருணரத்னே 29 ரன்களிலும்,குசல் மெண்டிஸ் 12 ரன்களிலும் தினேஷ் தந்திமால் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இலங்கை அணி 54 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

shakeel hits double century made pakistan in strong position vs sl 1st test

இதனை அடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஜெய் டி சில்வா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் சிறப்பாக விளையாடிய மேத்தியூஸ் 64 ரன்கள் சேர்த்தார். அபாரமாக விளையாடிய தனஜெய டி சில்வா 214 பந்துகளை எதிர் கொண்டு 122 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து சதிரா சமரவிக்ரமா 36 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து பாகிஸ்தான அணி முதல் இன்னிங்க்ஸில் களம் இறங்கியது. இதில் அப்துல்லா ஷபிக் 19 ரன்களிலும் இமாம் உல் ஹக் 1 ரன்னிலும் ஷான் மசூத் 39 ரன்களிலும், பாபர் அசாம்13 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணியும் 73 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

விக்கெட் கீப்பர் சப்ராஸ் அஹமத் 17 ரன்களில் வெளியேற இளம் வீரர் சவுத் சக்கில் அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியை பலமான இடத்திற்கு கொண்டு சென்றார். அவருக்கு சல்மான் துணை நிற்க இருவரும் இணைந்து இலங்கைக்கு பதிலடி கொடுத்தனர்.இதில் சவுத் சக்கில் சதத்தை தாண்டி அபாரமாக விளையாடி வந்தார். சல்மான் 83 ரன்களிலும் நோமன் அலி 25 ரன்களிலும் வெளியேறினார்.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகில் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான அணி முதல் இன்னிங்ஸில் 461 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 149 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சி உள்ள நிலையில் பாகிஸ்தான் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.

Story first published: Tuesday, July 18, 2023, 22:44 [IST]
Other articles published on Jul 18, 2023
English summary
shakeel hits double century made pakistan in strong position vs sl 1st test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+