Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் ஸ்டைல் வங்கதேசத்தில் எதிரொலி.. ஷகிப் அல் ஹசன் போட்ட கடும் சண்டை.. இறுதியில் என்ன நடந்தது??

டாக்கா: வங்கதேச உள்நாட்டு தொடரில் சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன், தோனியின் ஸ்டைலில் களத்திற்குள்ளேயே நுழைந்து மீண்டும் அம்பயர்களிடம் சண்டையிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரை போலவே வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் எனும் பெயரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தற்போது வரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன.

உலகளவில் இந்த தொடரின் மீது ரசிகர்களுக்கு உள்ள கவனத்தை விட, இந்த தொடரில் ஷகிப் அல் ஹசன் என்னென்ன பிரச்சினைகளை செய்து வருகிறார் என்பது தான் பிரபலமாகி வருகிறது.

என்ன சண்டை

என்ன சண்டை

சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது பவுன்ஸர் பால் போடப்பட்டது. அந்த பந்து சற்று உயரமாக சென்றது. ஆனால் அம்பயர் அதற்கு வைடு கொடுக்காமல் ஒன் பவுன்ஸ் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷகிப் லெக் அம்பயரை நோக்கி கடும் சண்டையில் ஈடுபட்டார். பேட்டை வைத்து தாக்கும் பாணியில் நடந்துக்கொண்டார்.

மீண்டும் சண்டை

மீண்டும் சண்டை

இந்நிலையில் அடுத்த சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. ஷகிப் அல் ஹசனின் ஃபார்ட்சியூன் பாரிசல் அணியும் ராங்பூர் ரைடர்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டியில் ராங்பூர் நிர்ணயித்த 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஷகிப் பின் அணி களமிறங்கியது. ஓப்பனிங் வீரர்களாக டி சில்வா ஸ்ட்ரைக்கிலும், அனாமுல் ஹக் நான் ஸ்ட்ரைக்கிலும் நின்று பந்துவீச எதிரணியும் தயாராகினர்.

ஷகிப் வாக்குவாதம்

ஷகிப் வாக்குவாதம்

ஆனால் திடீரென பவுண்டரி எல்லைக்கு வந்த ஷகிப் அல் ஹசன், தனது அணி வீரர்களை நோக்கி கத்தினார். அதாவது விக்கெட் கீப்பர் அனாமுலை ஸ்டரைக்கில் நிற்குமாறு கூறினார். எனினும் இதற்கு அம்பயர்கள் அனுமதி வழங்காததால் குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஷகிப் அல் ஹசன், நேரடியாக களத்திற்குள்ளே ஓடி வந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 நீடிக்கும் மர்மம்

நீடிக்கும் மர்மம்

வீரர்கள் ஒரு இடத்தில் நின்ற பிறகு எதற்காக ஷகிப் இடம் மாறி நிற்க சொன்னார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது. எனினும் அம்பயர்கள் அதற்கு அனுமதி தராததால் ஷகிப்பின் சண்டை வீணானது. இதனை தொடர்ந்து ஆடிய அந்த அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து வெற்றி கண்டனர்.

Story first published: Wednesday, January 11, 2023, 14:36 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+