Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செய்யக்கூடாத சம்பவம்.. அரண்டு போன ரசிகர்கள்.. அவசர அவசரமாக மன்னிப்பு கேட்ட ஷகிப்

டாக்கா: கிரிக்கெட் போட்டியில் தான் நடந்து கொண்ட மோசமான செயல்பாட்டால், தனது கிரிக்கெட் வாழ்க்கையே காலியாகிவிடும் என்று பயந்து உடனடியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஷகிப் அல் ஹசன்

Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் லீக் தற்போது வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், மோஹம்மெதான் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன்.

இவரது செயல்பாடு தான் தற்போது கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக். வங்கதேச ரசிகர்களே கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஸ்டெம்ப்புகளை உதைத்த ஷகிப்

ஸ்டெம்ப்புகளை உதைத்த ஷகிப்

முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

 வீசி எறிந்த ஷகிப்

வீசி எறிந்த ஷகிப்

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.

 ஒழுங்கு நடவடிக்கை

ஒழுங்கு நடவடிக்கை

இதனால் வங்கதேச ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் ஷகிப், கிரிக்கெட் போட்டியில் ;இவ்வளவு மோசமாக நடந்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உள்ளூர் போட்டி என்றாலும், ஐசிசி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

 அவசர மன்னிப்பு

அவசர மன்னிப்பு

இதனால் உஷாரான ஷகிப் பேஸ்புக்கில் அவசரமாக ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள ரசிகர்களே, ஃபாலோயர்களே, எனது மனநிலையை இழந்து, கிரிக்கெட் பார்க்கும்.. குறிப்பாக வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடையும் விதமாக நான் நடந்து கொண்டது குறித்து மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது, ஆனால் சில சமயங்களில் இது போன்று துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. எனது இந்த 'மனித பிழை'க்கு அணிகள், நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் இதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் எனது அன்புகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, June 12, 2021, 9:59 [IST]
Other articles published on Jun 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+