Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷகிபுல் ஹசனை துரத்தி அடிக்கும் விதி.. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கை!

லண்டன் : வாழ்க்கை ஒரு சிலரை உச்சத்தில் வைத்திருக்கும். அப்போது அவர்கள் தங்களிடம் அனைத்துப் பவுருமே இருக்கின்றது என நினைத்து ஓவராக ஆடினால் அடுத்த கணமே அவர்களை கீழே தள்ளிவிடும். அப்படித்தான் தற்போது வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷஹீபுல் ஹசனின் வாழ்க்கை மாறிவிட்டது.

ஒரு காலகட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் அந்த நாட்டில் மிக அந்தஸ்து பெற்ற நபராக ஷகிபுல் ஹசன் இருந்தார். ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடைபெற்ற அரசியல் போராட்டங்கள் காரணமாக தற்போது நாடு கூட திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

cricket shakib al hasan bangladesh

வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 4609 ரன்களும், பந்து வீச்சில் 246 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 247 போட்டிகளில் 7570 ரன்களும், பவுலிங்கில் 317 விக்கெட்டுகளும், சர்வதேச t20 போட்டிகளில் 129 ஆட்டங்களில் 251 ரன்களும் 149 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

37 வயதான ஷகிபுல் ஹசன் அண்மையில் டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வங்கதேசம் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்று ரசிகர்கள் முன் பிரியா விடை பெற வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் வங்கதேசத்தில் அவர் விளையாடக்கூடாது என போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,ஆசை நிறைவேறாமல் போனது.

இந்த நிலையில், நாடு கூட திரும்ப முடியாமல் தற்போது ஷகிபுல் ஹசன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த சூழலில் உலகில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்க முடிவெடுத்தார். அப்போதுதான் ஐபிஎல் தொடரில் ஷகிபுல் ஹசன் ஏலம் போகவில்லை.

இதனால் ஏற்கனவே விரக்தியில் இருந்த ஷகிபுல் ஹசன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் அதற்கும் தற்போது ஒரு ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிபுல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அது உறுதியானது.

இதன் காரணமாக இங்கிலாந்தில் இனி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஷகிபுல் ஹசன் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஷகிபுல் ஹசன் விரக்தியில் உச்சத்தில் இருக்கின்றார். எனினும் ஐபிஎல் தொடர் மூலமே கோடிக்கணக்கில் ஷகிபுல் ஹசன் சம்பாதித்து விட்டதால் அமெரிக்காவில் அவர் தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். எனினும் நாடு திரும்ப முடியாது.

Story first published: Saturday, December 14, 2024, 22:36 [IST]
Other articles published on Dec 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+