“என்ன மனசு சார் உங்களுக்கு” மோசமாக கிண்டலடித்த இலங்கை அணி.. கோபம் இன்றி புகழ்ந்த ஷகிப் அல் ஹாசன்
துபாய்: கிண்டலடித்த இலங்கை வீரர்களை வங்கதேச கேப்டன் புகழ்ந்து தள்ளியிருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 183/7 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 184/8 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.

பரபரப்பான போட்டி
இந்த போட்டி இரு அணிகளும் மோதும் ஒரு போர் போன்றே காட்சி தந்தது. ஏனென்றால் போட்டிக்கு முன்பாக பேசியிருந்த இலங்கை கேப்டன் ஷனகா, " வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை எனக்கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வங்கதேச அணி, இலங்கை அணியில் நல்ல பேட்ஸ்மேன், பவுலர் என யாருமே கிடையாது எனக்கூறியிருந்தனர். இதனாலேயே இந்த போட்டி பரபரப்பாக நடந்தது.

நாகினி டேன்ஸ்
இந்நிலையில் இந்த பிரச்சினை, போட்டி முடிந்த பிறகு அடுத்தகட்டத்திற்கு சென்றது. இலங்கை அணி வெற்றி பெற்ற உடனே, டக் அவுட்டில் நின்றிருந்த அந்த அணியின் சக வீரர்கள் கொண்டாட, கருணரத்னே மட்டும் நாகினி நடனமாடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார். வங்கதேச வீரர்கள், ஒரு அணியை வீழ்த்தினால் இந்த நடனம் ஆடி தான் கடுப்பேற்றுவார்கள். அதனை அவர்களுக்கே திருப்பி கொடுத்தனர்.

காரணம் என்ன
எனினும் கடுப்பேற்றியவர்கள் மீது துளியும் கோபம் காட்டாமல் வங்கதேச கேப்டன் ஷகிப் உல் ஹாசன் பேசியுள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், ஒரு சில ஓவர்களை சிறப்பாக வீசவில்லை என்பது தான் தோல்விக்கு காரணமானது. கடைசி ஓவரில் அவர்கள் 8 விக்கெட்களை இழந்திருந்தனர். எனினும் பவுலர்களின் சொதப்பலால் திட்டத்தை சரியாக செய்ய முடியவில்லை.

ஷனகாவுக்கு பாராட்டு
இலங்கை வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். குறிப்பாக தசுன் ஷனகா சிறப்பாக விளையாடினார். அவரின் சிறந்த ஆட்டம் தான் அனைத்தையும் மாற்றியது.
கடந்த 6 மாதங்களாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்ததாக டி20 உலகக்கோப்பை வரவுள்ளது. அதற்கு தற்போது இருந்தே தயாராக முயற்சிக்கிறோம் என ஷகிப் கூறினார். வஙக்தேச அணியில் நல்ல பவுலர்கள் இல்லை என விமர்சித்த ஷனகாவை ஷகிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications