Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே!

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் தந்தையாகப் போகிறாராம். அவரது மனைவி தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.

Recommended Video

Top 10 players with most catches in International cricket

ஷாகிப் அல் ஹசனுக்கும் அவரது மனைவி உம்மே அகமது சிசிருக்கும் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதி இங்கிலாந்தில் சந்தித்து காதல் கொண்டு பின்னர் கரம் பிடித்தது.

பின்னர் 2015ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தத் தம்பதிக்கு அலைனா ஹசன் என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இன்னொரு குழந்தைக்கு தந்தையாகப் போகிறார் ஷாகிப் அல் ஹசன்.

அமெரிக்காவில் தனித்திருத்தல்

அமெரிக்காவில் தனித்திருத்தல்

தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் ஷாகிப் அல் ஹசன். தனது மனைவி மற்றும் குடும்பத்தைச் சந்திக்கவே அங்கு போயுள்ளார். ஆனால் அவர் அங்கு தற்போது தனித்திருந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் போட்டுள்ளார் ஷாகிப் அல் ஹசன். அவரது மகள் அதில் இருக்கிறார். கண் நிறைய சிரிப்புடன் வெல்கம் ஹோம் என்று எழுதப்பட்ட குட்டி பாப்பாக்களுக்கான டிரஸ்ஸை கையில் பிடித்துள்ளார்.

View this post on Instagram

Big sisterhood ❤❤❤

A post shared by shakib al hasan (@shaki_b75) on

மீண்டும் தாயானார்

ஷாகிப் இதற்கு கொடுத்துள்ள கேப்ஷன் பெரிய அக்கா என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவரது மனைவி மீண்டும் தாயாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த புகைப்படத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஷாகிப் அல் ஹசன் தற்போது தொடர்ந்து ஹோட்டலிலேயே தங்கியுள்ளார். அங்கேயே அவர் தனது 33வது பிறந்த நாளையும் மார்ச் 24ம் தேதி தனியாகவே கொண்டாடினார்.

மகளைப் பார்க்க முடியாமல் தவிப்பு

மகளைப் பார்க்க முடியாமல் தவிப்பு

ஹோட்டலில் தனியாக இருந்தபோது தனது மகளைக் கூட பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு ஒரு வீடியோவும் போட்டிருந்தார். இருப்பினும் தனது குடும்பத்தின் நலனுக்காக இந்த தனித்திருத்தல் அவசியம். எனவே அனைவரும் தனித்திருக்க முயற்சியுங்கள். அது உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும், உங்கள் அக்கம் பக்கத்தினருக்கும் நல்லது என்று கூறியிருந்தார்.

கொரோனா உதவி

கொரோனா உதவி

மறுபக்கம் வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசனின் அறக்கட்டளையானது, 2000 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி உதவிக் கரம் நீட்டியுள்ளது. மேலும் உலக அளவில் நிதி வசூலித்து ஏழை மக்களுக்கு உதவப் போவதாகவும் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். அவருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, April 8, 2020, 15:09 [IST]
Other articles published on Apr 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+