
ஜெர்சி கூட இல்லை
இது குறித்து பேசிய அவர் வங்கதேசத்தில் கிரிக்கெட் தான் பிரபலமான விளையாட்டு. கிராமத்தில் கூட கிரிக்கெட் தான் விளையாடுகிறார்கள். அப்படி இருக்க பிபிஎல் தொடருக்கு நாம் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தாமல் விட்டு விட்டோம். வீரர்களை தேர்வு செய்யும் முறையை கூட நாம் சரியாக நடத்துவதில்லை. ஏன் போட்டியில் டிஆர்எஸ் முறை கூட இல்லை. நான் செய்திகளில் படித்தேன் ஏதோ ஒரு அணியின் ஜெர்ஸி தயாரிக்கும் பணி கூட இன்னும் முடிவடையவில்லை.

முதல்வன் படம்
இது நிச்சயம் வங்கதேச பிரிமியர் லீக் எந்த அளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. என்னை இந்த லீகின் தலைவராக மாற்றுங்கள். நான் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அனைத்தையும் சரி செய்து விடுவேன். நீங்கள் நாயக் என்ற படத்தை ( முதல்வன் படத்தின் ஹிந்தி ரிமேக்) பார்த்து இருக்கிறீர்கள் தானே. அந்த படத்தில் வருவது போல், நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒரு நாளில் கூட செய்து விட முடியும்.

அதிரடியாக மாற்றுவேன்
நான் வங்கதேச பிரிமியர் லீக் சி இ ஓ அக பதவியேற்றால் வீரர்களுக்கு ஏலம் நடத்தும் முறையை சரியாக செய்வேன். முதலில் வங்கதேச பிரிமியர் லீக் தொடரை மற்ற லீக் போட்டிகளுடன் மோதும் வகையில் அனைத்து வீரர்களும் பங்கேற்கும் நேரத்தில் வைத்திருப்பேன். கிரிக்கெட்டில் இப்போது பல ஒளிபரப்பு தொழில்நுட்ப முறைகள் வந்துவிட்டது. ஆனால் வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் அப்படி எந்த முறையும் நான் காணவில்லை.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
முதலில் போட்டியை ஒளிபரப்பு முறையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும். தற்போது தொடங்க உள்ள தொடரில் வெளிநாட்டு வீரர்கள் எத்தனை போட்டியில் பங்கேற்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் ரசிகர்களிடையே போய்விடும். பிபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது என்ற செய்தி மட்டும்தான் தெரியும். பயிற்சியைகூட நாங்களாக தான் செய்து வருகிறோம். போட்டி தொடங்கும் போது தான் என்ன நடக்கிறது என்று ஒரு அளவுக்கு தெரிய வரும்.

யாருமே பார்ப்பதில்லை
பிபிஎல் தொடரை எந்தெந்த நாடுகள் எல்லாம் ஒளிபரப்பு செய்கிறோம் என்று காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் யாரும் அந்த தொடரை பார்ப்பதில்லை. பாகிஸ்தான் பிரீமியர் லீக் ,கரீபியன் பிரீமியர் லீக் போன்ற தொடரில் விளையாடும் அறிமுக வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு உடனே வழங்கப்படும். ஆனால் பிபி எல் தொடரில் அப்படி விளையாடினால் கூட அணியில் சேர்க்கப்படுவதில்லை. இப்படி ஒரு ஏமாற்றமான தொடரில் விளையாடினால் எப்படி வீரர்கள் முன்னேறுவார்கள் என்று ஷகிபுல் ஹசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











