ஐபிஎல் தொடரில் விலை போகாத ஷகிபுல் ஹசன்.. என் புருஷனை பற்றி தெரியாம பேசாதீங்க..!! மனைவி பாய்ச்சல்..
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷிகிபுல் ஹசன் விலை போகவில்லை. இதனால் அவரை குறிவைத்து பல மீம்ஸ் உருவானது.
பல்வேறு வங்கதேச வீரர்களையும் ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஷகிபுல் ஹசன் விவகாரத்தில் ஒரு காரணம் இருப்பதாக் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும் ஷகிபுல் ஹசன் தொடர்பாக வெளிவந்த மீம்ஸ்க்கும் அவர் தக்க பதிலடி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில்,

2 ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் என்ன நடந்தது என்ற தெரியாமல் பலரும் பேசி வருகின்றனர். ஏலத்திற்கு முன்பே 2 அணிகள் என் கணவனை தொடர்பு கொண்டு, இந்த ஆண்டு உங்களால் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்று கேட்டனர்.

இலங்கை தொடர்
ஆனால் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேசம் விளையாட இருப்பதால், முழு தொடரிலும் பங்கேற்க இயலாது என்று என் கணவர் ஷகிபுல் ஹசன் பதில் அளித்தார். இதனால் தான் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த ஆண்டு இல்லை என்றால், அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஷகிபுல் ஹசன் விளையாடுவார்.

காட்டமான பதிவு
ஒரு வேலை, இலங்கை தொடரை அவர் புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தால், இதே மாதிரி நீங்கள் பேசுவீர்களா என் புருஷனை தேச துரோகி என்று முத்திரை தானே குத்தி இருப்பீர்கள். உங்களின் தீய ஆசைகள் மீது என் கணவன் தண்ணீர் ஊற்றிவிட்டாபர். மனித்து கொள்ளுங்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்

ஷகிபுல் ஹசன் செயல்பாடு
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனான ஷகிபுல் ஹசன், 2011ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். கொல்கத்தா அணி வென்ற 2 சாம்பியன் பட்டத்திலும் அணியில் இடம்பெற்ற ஷகிபுல் ஹசன், 2018ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு விளையாடி பின்னர் கேகேஆர் அணிக்கே திரும்பினார். இதுவரை 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 63 விக்கெட்டுகளும், 793 ரன்களும் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications