For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாகனங்களின் காதலன் தோனி... கலெக்ஷன் குறித்து வீடியோ வெளியிட்ட சாக்ஷி

ராஞ்சி : முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வாகனங்களின் காதலன் என்பதும் அவரிடம் அதிக அளவிலான பைக் மற்றும் கார்களின் கலெக்ஷன் உள்ளதும் பரவலாக அனைவருக்கும் தெரிந்த விஷயம்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பலதரப்பட்ட திறமைகளின் கூட்டு உருவமாக உள்ளார். கிரிக்கெட்டிலேயே விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் போன்றவற்றில் இவர் சிறந்து விளங்குகிறார்.

இதேபோல வெளியிலும் கால்பந்து போன்றவற்றிலும், பைக், கார் கலெக்ஷன் போன்ற பல்வேறு தளங்களிலும் அவர் சிறந்து காணப்படுகிறார்.

கிரிக்கெட்டிலிருந்து விலகல்

கிரிக்கெட்டிலிருந்து விலகல்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இரண்டு உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியவர். பல்வேறு சாதனைகளுக்கு இந்தியாவை இட்டு சென்றவர்.

பிசிசிஐ பட்டியலில் நீக்கம்

பிசிசிஐ பட்டியலில் நீக்கம்

கடந்த உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ள தோனி, பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சாக்ஷி தோனி வீடியோ

சாக்ஷி தோனி வீடியோ

இவை குறித்தெல்லாம் கவலை கொள்ளாத தோனி ஒருபுறம் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி எடுக்க கிளம்பிய நிலையில், அவரது மனைவி சாக்ஷி தோனி, அவரது வாகன ஆர்வம் குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மறுபதிவு செய்த ரசிகர்கள்

தங்களது பண்ணைவீட்டில் அணிவகுக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை தோனி ரசிகர்கள் மறுபதிவு செய்து வருகின்றனர்.

தோனியின் அழகான ஆர்வம்

தோனியின் அழகான ஆர்வம்

தோனியிடம் மற்ற வாகனங்களுடன் பெராரி 599 ஜிடிஓ, ஹும்மர் ஹெச்2, ஜிஎம்சி சியாரா போன்ற கார்களும், கவாசாகி நிஞ்சா ஹெச்2, கான்பெடரேட் ஹெல்காட், பிஎஸ்ஏ, சுசூகி ஹயபுசா, நார்டன் வின்ட்டேஜ் போன்ற அரியவகை பைக் கலெக்ஷன்களும் உள்ளன.

Story first published: Monday, January 20, 2020, 18:05 [IST]
Other articles published on Jan 20, 2020
English summary
MS Dhoni's Massive Bike Collection - Sakshi Dhoni shares
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+