டெல்லி: இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் நடுவேயான ஆட்டம் மழை இடையூறு காரணமாக கைவிடப்பட்டதால், டெஸ்ட் தர வரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், ஏதோ திறமையால் முதலிடத்துக்கு வந்ததை போல பீற்றிக்கொண்டு இந்திய வீரர்களை குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லியை குறிவைத்து மீம்ஸ் உருவாக்கி வருகிறார்கள் பாகிஸ்தானிய நெட்டிசன்கள்.
டெஸ்ட் தர வரிசையில், இந்தியா 112 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 111 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2வது இடத்திலும் இருந்த நிலையில், மே.இ.தீவுகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டு, போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இந்தியா அநியாயமாக இரு புள்ளிகளை இழக்க வேண்டிவந்தது. 110 புள்ளிகளுடன் தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. இதனால் வேறு வழியில்லாமல், தானாக பாகிஸ்தான் முதலிடத்திற்கு வந்தது.
இப்படி காற்றடித்ததால் கோபுரத்தின் மீது போய் ஒட்டிக்கொள்ளும் இலை போல இருந்தபோதிலும், பாகிஸ்தான் ரசிகர்கள் என்னவோ தங்கள் நாடு இந்தியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்ததை போல பீற்றிக்கொள்கிறார்கள்.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்ஹக்கை கிங்காக சித்தரித்து, கோஹ்லியை அசிங்கப்படுத்தும் மீம்ஸ்களை உருவாக்கி தங்கள் வக்கிரத்தை தீர்த்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்போதுதான் டெஸ்ட் ரேங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள். ஒருவேளை காணாததை கண்டதால் இப்படி அலைகிறார்களோ என்னவோ.
சென்ட்ராயன் இதுக்கு நீங்க பெருமையெல்லாம் படக்கூடாது!