Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங் வீடு மீது கல்வீச்சு - இறுதிப் போட்டியில் 'ஆமை' பேட்டிங்.. ரசிகர்கள் ஆத்திரம்!

சண்டிகர்: இலங்கைக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது மகா மந்தமாக விளையாடியதால் யுவராஜ் சிங் மீது ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை அவரது வீட்டில் கல்வீசித் தாக்கி வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்றைய இறுதிப் போட்டியில் மகா மந்தமாக ஆடினார் யுவராஜ். 21 பந்துகளைச் சந்தித்த அவர் ஏதோ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல சிங்கிளாக எடுத்து 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

மிக மிக முக்கியமான ஆட்டத்தின்போது, இப்படி மகா மந்தமாக ஆடியதால் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு 40 ரன்களைச் சேர்க்கும் வாய்ப்பு பறி போய் விட்டது. யுவராஜ் மட்டும் சற்று அதிரடியாக அல்லது குறைந்தபட்சம் சற்று வேகமாக ஆடியிருந்தால் கூட 30 ரன்கள் கூடுதலாக கிடைத்திருக்கலாம். ஆனால் அதை அவர் தவற விட்டு விட்டார்.

கடைசியில் இந்தியா மிகவும் குறைந்த ஸ்கோரையே எடுக்க முடிந்தது. அதை இலங்கை அணி அழகாக சேஸ் செய்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரசிகர்கள் யுவராஜ் சிங்கை, பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கடுமையாக திட்டி விமர்சித்து வருகின்றனர். உச்சகட்டமாக சண்டிகரில் உள்ள அவரது வீடு மீது கல்வீசித் தாக்கியுள்ளனர்.

ராத்திரியோடு ராத்திரியாக தாக்குதல்

ராத்திரியோடு ராத்திரியாக தாக்குதல்

நேற்று இரவு போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே யுவராஜ் வீடு மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

விரைந்து வந்த போலீஸ்

விரைந்து வந்த போலீஸ்

தகவல் கிடைத்ததுமே போலீஸார் விரைந்து வந்தனர். வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களை அவர்கள் அமைதிப்படுத்தினர்.

ஏன் இப்படி யுவராஜ்.. ரசிகர்கள் ஆத்திரம்

ஏன் இப்படி யுவராஜ்.. ரசிகர்கள் ஆத்திரம்

இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிக அருமையாக ஆடியிருந்தார் யுவராஜ். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார். ஆனால் சாதாரண இலங்கையிடம் அவர் பணிந்து போனார் என்பதுதான் ரசிகர்களின் ஆத்திரம் கலந்த கேள்வி.

டிவிட்டரில் காரித் துப்புகிறார்கள்

டிவிட்டரில் காரித் துப்புகிறார்கள்

டிவிட்டர், பேஸ்புக்கிலும் யுவராஜை கடுமையாக விமர்சிதது வருகிறார்கள் ரசிகர்கள்.

ஹர்பஜன் சிங் அதிர்ச்சி

ஹர்பஜன் சிங் அதிர்ச்சி

ஆனால் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் விமர்சிப்பதற்கு ஹர்பஜன் சிங் வருத்தமும், அதிர்ச்சியும் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இவர்தானே 2 உலகக் கோப்பைகள் கிடைக்கக் காரணம்

இவர்தானே 2 உலகக் கோப்பைகள் கிடைக்கக் காரணம்

இதுகுறித்து ஹர்பஜன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட் செய்தியில், அனைவரும் யுவராஜை விமர்சிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்தான் நமக்கு 2 உலகக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இந்தியாவுக்காக உறுதியுடன் ஆடக் கூடிய அரிய வீரர்களில் யுவியும் ஒருவர்.

2007 முதல் 2011 வரை

2007 முதல் 2011 வரை

2007ல் நடந்த முதலாவது டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றது, 2011ல் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்தது என்று யுவராஜின் சாதனையைப் பாருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எந்த ஒரு வீரராவது யுவியைப் போல விடா முயற்சியுடன் செயல்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கூறுங்கள். இது ஒரு மோசமான தினம்.

யுவராஜ் மட்டும்தானா

யுவராஜ் மட்டும்தானா

மேலும் போட்டியில் யுவராஜ் சிங் மட்டும்தானா ஆடினார். மேலும் 10 பேர் இருக்கிறார்கள். அதையும் மறந்து விடக் கூடாது. நாம் சிறந்த அணியடம்தான் தோற்றுள்ளோம். தோல்விக்கு ஒருவரை மட்டும் பலிகடாவாக்குவது ஏன். இது அணி விளையாட்டு என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

Story first published: Monday, April 7, 2014, 11:28 [IST]
Other articles published on Apr 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+