மொத்தமாக முடக்கி போட்ட எலும்பு முறிவு.. 2 மாதத்திற்கு எதுவும் செய்ய முடியாது.இந்திய பவுலருக்கு செக்
சிட்னி: இந்திய அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான முகமது சமி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிக முக்கியமான பவுலர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இவரின் கையில் இருக்கும் எலும்பில் சின்ன முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பேட்டிங் செய்த போது இவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.

எப்படி ஏற்பட்டது
இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாக கடைசியில் ஷமி பேட்டிங் செய்த போது இவரின் கையில் காயம் ஏற்பட்டது. இதில் மணிக்கட்டில் பலத்த அடிபட்டது. இதில் மணிக்கட்டு பகுதியில் பெரிய பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டது.

முறிவு
இந்த ஸ்கேன் முடிவில் ஷமியின் மணிக்கட்டு உடைந்து போனது கண்டுபிடிக்கப்பட்டது. மணிக்கட்டில் ஒரு எலும்பு பகுதி உடைந்து உள்ளது. இந்த முறிவு மிகவும் பெரிதாக இருக்கிறது. முக்கியமான எலும்பு இணைப்பு முறிந்துள்ளது.

ஓய்வு
இதனால் இன்னும் பல நாட்கள் ஷமி ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதனால் ஜனவரி இறுதி வரை அவர் களத்திற்கு வர முடியாது. அது வரை ஷமி பவுலிங் செய்ய முயற்சி செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஜனவரிக்கு பின்பும் ஷமி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

முடியாது
இதனால் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியிலும் ஷமி கலந்து கொள்ள முடியாது. இதன் காரணமாக பிப்ரவரி இறுதிவரை ஷமி களமிறங்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். அதன்பின்பு இந்திய அணியில் ஷமிக்கு வாய்ப்பு கிடைப்பதும் கஷ்டம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications