Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேறு வழியே இல்லை.. அவரை வரச்சொல்லுங்க.. ரெஸ்டில் இருக்கும் மூத்த வீரரை அழைத்த கோலி.. பரிதாப நிலை

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா சரியாக பவுலிங் செய்யாத நிலையில் கேப்டன் கோலி இந்திய அணியில் புதிய பவுலர் ஒருவரை சேர்க்க உள்ளார் .

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் அதிரடியாக ஆடி உள்ளது. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.

மோசம்

மோசம்

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பவுலர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அஸ்வின், பும்ரா மட்டுமே விக்கெட் எடுக்கும் வகையில் பவுலிங் செய்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் விக்கெட் எடுக்க கூடிய பந்துகளை வீசவில்லை.

பந்துகள்

பந்துகள்

அதிலும் மூத்த வீரர் இஷாந்த் சர்மா விக்கெட் எடுக்கும் வகையில் 3-4 பந்துகளை மட்டுமே மொத்தமாக வீசினார். மற்றபடி இவர் ரன் கொடுக்காத வகையில்தான் பவுலிங் செய்தார். இஷாந்த் சர்மா நேற்று அவ்வளவு சிறப்பான பந்து வீச்சை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகம்

சந்தேகம்

இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஒன்றரை வருடமாக ஆடவில்லை. இதனால் அவர் சரியான பார்மில் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே அவரால் விக்கெட்டும் எடுக்க முடியவில்லை. இவர் திணறுவதற்கும் இந்த நீண்ட இடைவெளிதான் காரணம்.

ஷமி

ஷமி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா சரியாக பவுலிங் செய்யாத நிலையில் கேப்டன் கோலி இந்திய அணியில் ஷமியை மீண்டும் சேர்க்க உள்ளார். மணிக்கட்டில் எலும்பு விலகியதால் இவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறினார். இத்தனை ஷமி ரெஸ்டில் இருந்தார்.

மீண்டும் வந்துள்ளார்

மீண்டும் வந்துள்ளார்

இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து ஷமி மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி உள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர் பெங்களூரில் பவுலிங் செய்து வருகிறார். இவர் இன்னும் ஒரு வாரத்தில் இந்திய அணியுடன் இணைந்து பின் தனிமைப்படுத்திக் கொள்வார்.

பவுலிங்

பவுலிங்

அகமதாபாத்தில் நடக்க உள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் இவர் இந்திய அணியில் சேர்க்கப்படுவார். இஷாந்த் சர்மா மோசமான பார்மில் இருப்பதால் இவர் உள்ளே வருகிறார். ஷமி உள்ளே வருவதால் சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள்.

Story first published: Saturday, February 6, 2021, 9:31 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+