Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 ரஞ்சி போட்டிகளில் 15 விக்கெட்ஸ்.. மரண கம்பேக் கொடுத்த முகமது ஷமி.. அஜித் அகர்கருக்கு பதிலடி!

மும்பை: ரஞ்சி டிராபி தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நட்சத்திர வீரர் முகமது ஷமி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான கம்பேக்கை கொடுத்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கதவுகள் திறக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஓரம்கட்டப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடினார். இருந்தாலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Shami vs Agarkar

அதற்கு தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், முகமது ஷமி ஃபிட்னஸ் பிரச்சனையுடன் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ரஞ்சி டிராபி தொடர்களில் முகமது ஷமி விளையாடிய போது, ஃபிட்னஸ் உடன் இல்லையென்றால், என்சிஏவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பேன். ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடியிருக்க முடியாது. ஃபிட்னஸ் உடன் இருக்கிறேனா என்பதை அப்டேட் செய்வது எனது பணியல்ல என்று தெரிவித்தார்.

இதனால் முகமது ஷமியின் பேச்சு விவாதமாகியது. இதுதொடர்பாக அஜித் அகர்கரிடம் கேட்ட போது, உண்மையாகவே முகமது ஷமி அப்படி கூறி இருந்தால், அவருடன் பேசுவதற்கான நேரம் இது என்று தெரிவித்தார். இதனால் இந்திய அணியில் இருந்து முகமது ஷமி வேண்டுமென்றே ஓரம்கட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி அசத்தலாக செயல்பட்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் 18.3 ஓவர்களை வீசி 44 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின் 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏற்கனவே பெங்கால் அணிக்காக இந்த சீசனில் ஆடிய முதல் ரஞ்சி போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் 2 போட்டிகளிலும் சேர்த்து முகமது ஷமி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி கம்பேக் கொடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ரஞ்சி டிராபியில் ஆடியதன் மூலமாக ஃபிட்னஸை நிரூபித்த முகமது ஷமி, தற்போது ஃபார்மையும் நிரூபித்து காட்டியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால் யாரின் இடத்தில் முகமது ஷமி ஆடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 28, 2025, 16:44 [IST]
Other articles published on Oct 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+