Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடாமல் மிரட்டுகிறார்கள்.. ஒவ்வொரு நொடியும் பயமாக உள்ளது.. பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பரபர புகார்

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹாசின் ஜஹான் பரபரப்பு புகார் ஒன்றை கூறி, நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு கோரி உள்ளார்.

முகமது ஷமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் ஹாசின் ஜஹான் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

ஹாசின் ஜஹான் ஆகஸ்ட் 5 அன்று ராமர் கோவில் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். தன் வாழ்த்தில், "அயோத்தியாவில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்." என கூறி இருந்தார்.

பாதுகாப்பு வேண்டும்

பாதுகாப்பு வேண்டும்

அவரது பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. கொலை செய்து விடுவோம் என்றும், கற்பழிப்போம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அடுத்து அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார்.

மிரட்டி வருகிறார்கள்

மிரட்டி வருகிறார்கள்

தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார் ஹாசின் ஜஹான். தன் மனுவில், ஹிந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தை எண்ணி கவலை

எதிர்காலத்தை எண்ணி கவலை

மேலும், இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன். சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன்" என்றும் கூறி உள்ளார்.

கெட்ட கனவாக உள்ளது

கெட்ட கனவாக உள்ளது

"எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்" என கோரி உள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

இரு ஆண்டுகளுக்கு முன் முகமது ஷமியுடன் ஹாசின் ஜஹான் கடுமையாக பொது வெளியில் மோதினார். அப்போது முதல் ஹாசின் ஜஹான் மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. அவரது சில செயல்பாடுகளும் சர்ச்சைக்குரிய முறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 14, 2020, 19:04 [IST]
Other articles published on Sep 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+