Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 பெண்களை அழைத்த ஷேன் வார்னே.. மரணத்திற்கு முந்தைய சிசிடிவி காட்சிகள்..கடைசி நிமிடங்களை கூறிய போலீஸ்

தாய்லாந்து: ஷேன் வார்னே உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது அறைக்கு 4 பெண்கள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கடந்த மார்ச் 4ம் தேதியன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அவர் உயிரிழந்ததையடுத்து பலரும் மரணத்தில் சந்தேகம் தெரிவித்தனர்.

 நீடிக்கும் மர்மம்

நீடிக்கும் மர்மம்

ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது தான், உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் மரணத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்றன. உண்மையில் டயட் தான் அவரின் மரணத்திற்கு காரணமா என்பதை ரசிகர்கள் நம்பவில்லை.

சிசிடிவி பதிவுகள்

சிசிடிவி பதிவுகள்

இந்நிலையில் ஷேன் வார்னே இறப்பதற்கு முன்னதாக 4 பெண்மணிகளை அவர் அழைத்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் மார்ச் 4ம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பிய வார்னே 4 மசாஜ் செய்யும் பெண்களை வரச்சொல்லியுள்ளார். இதனையடுத்து அவர்களும் சென்றுள்ளனர். இதில் 2 பேரை நண்பர்களுக்கும், 2 பேரை தனக்கும் மாசாஜ் செய்யும்படி வார்னே கோரியுள்ளார்.

அந்த ஒரு மணி நேரம்

அந்த ஒரு மணி நேரம்

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வார்னேவுடன் இருந்த அந்த பெண்கள் 2.58 மணிக்கு அறையில் இருந்து வெளியே சென்றனர். இதுகுறித்த முழு சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil
போலீஸ் நடவடிக்கை

போலீஸ் நடவடிக்கை

இப்படி மசாஜ் பெண்கள், ரத்தக்கறைகள் என பல சந்தேகங்கள் இருந்தாலும், வார்னே இயற்கையான முறையில் தான் உயிரிழந்தார் என அடாப்சி ரிப்போர்ட் கூறுகிறது. மேலும் இந்த வழக்கை முடித்து, வார்னே உடலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் பணிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Story first published: Thursday, March 10, 2022, 10:42 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+