Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வார்னேவின் சிசிடிவி காட்சி.. கடைசியாக எங்குச் சென்றுள்ளார் பாருங்கள்..மனம் கலங்கும் ரசிகர்கள்

தாய்லாந்து: ஷேன் வார்னே உயிரிழப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பால் காலமானார்.

52 வயதே ஆகும் அவரின் இந்த திடீர் மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பரபரப்பு கிளம்பியது.

என்ன ஆனது

என்ன ஆனது

3 நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவில் இன்பச்சுற்றுலாவாக சென்றுள்ளார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது தன்னுடைய அறையில் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்துள்ளார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட முதலுதவி தோல்வியில் முடிவடைந்த பின்னர் தான் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் வார்னே தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகளில் இருந்து முக்கிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக வார்னே வெளியே இருந்து தனது அறைக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. மார்ச் 4ம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு பதிவானது. லாபியில் தனது கைகளில் புது துணிகளுடன், ஜாலியாக நடந்து செல்கிறார். அவர் உடல்நிலை சரியில்லாத சூழல் ஒன்றுக்கூட அதில் தென்படவில்லை.

கடைசி பயணம்

கடைசி பயணம்

அன்றைய தினம் காலையில் தாய்லாந்தில் உள்ள தனது ஃபேரரெட் துணி டெய்லர், புதிய துணிகளை வாங்கச்சென்றுவிட்டு வந்துள்ளார். அங்கு நீண்ட நேரம் காத்திருந்து தனது புதிய சூட்களை பெற்றுக்கொண்ட பின்னர், அறைக்கு திரும்பியுள்ளார். அதன்பின்னர் தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஏற்கனவே வார்னேவின் கடைசி புகைப்படம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Recommended Video

அறை முழுவதும் ரத்தக் கறைகள்.. Shane Warne மரணத்தில் மர்மம்?
அடாப்சி ரிப்போர்ட்

அடாப்சி ரிப்போர்ட்

ஷேன் வார்னேவின் அடாப்சி ரிப்போர்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இயற்கையான முறையில் தான் உயிரிழந்துள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக நீராகாரங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும் டயட்டில் வார்னே இருந்துள்ளார் எனவும், அது முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் குடும்பத்தாரே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 10, 2022, 10:23 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+