Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? லாராவா?.. சூப்பர் பதில் சொல்லி எஸ்கேப் ஆன வார்னே

Recommended Video

யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? லாராவா?.. வார்னே கூறிய பதில்- வீடியோ

மும்பை : என் வாழ்நாள் முழுவதும் பேட்டிங் செய்ய சச்சினை தான் அழைப்பேன் என சிறந்த பேட்ஸ்மேன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஷேன் வார்னே.

"நோ ஸ்பின்" என்ற பெயரில் தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் ஷேன் வார்னே. அது தொடர்பான பேட்டி ஒன்றில் தான் சச்சின் மற்றும் லாரா பற்றி பேசியுள்ளார் வார்னே.

ஷேன் வார்னே சுழற்பந்துவீச்சில் கலக்கிய அதே காலத்தில் பேட்டிங்கில் கொடி கட்டி பறந்த இரண்டு உச்ச பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா. அவர்கள் பற்றி வார்னே என்ன கூறினார் என பார்க்கலாம்.

வாழ்நாள் முழுவதும் சச்சின்

வாழ்நாள் முழுவதும் சச்சின்

யார் சிறந்த பேட்ஸ்மேன், சச்சினா? லாராவா? என்ற கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்துவிட்ட வார்னே, இப்படி கூறினார். "எங்கள் தலைமுறையில் சச்சின், லாரா இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டுமென்றால் நான், லாராவை தான் அனுப்புவேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பேட்டிங் செய்ய சச்சினை அனுப்புவேன். அவருடைய ஆட்டம் அற்புதமானது" என கூறினார் வார்னே.

டெண்டுல்கர் - வார்னே போட்டி

டெண்டுல்கர் - வார்னே போட்டி

டெண்டுல்கர் - வார்னே இடையே ஆன போட்டி எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை அளிக்கவல்லது. அதில் பெரும்பாலும் சச்சினே வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 1998ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில், சச்சின் தனி ஒருவராக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அந்த தொடரில் வார்னேவை குறிவைத்து தாக்கினார் சச்சின். அப்போது, வார்னே, சச்சினை பற்றி நினைத்தாலே கெட்ட கனவு போல உள்ளது என கூறினார்.

இந்தியாவில் குறைவு ஏன்?

இந்தியாவில் குறைவு ஏன்?

மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவில் வார்னே மிக குறைந்த அளவிலான விக்கெட்களே வீழ்த்தி உள்ளார். அதற்கு காரணம் இந்திய மண்ணில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களின் போது அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதில் இருந்து மீண்டு வராத நிலையில் ஆடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வலுவான அணி

இந்தியா வலுவான அணி

மேலும், சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஷ்மன், சேவாக் என இந்திய அணி அப்போது வலுவாக இருந்ததாகவும், அவர்கள் தன்னை விட சிறப்பாக செயல்பட்டார்கள் என கூறியுள்ளார் வார்னே.

Story first published: Thursday, October 11, 2018, 11:58 [IST]
Other articles published on Oct 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+