Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராவது கனவுனு சொல்லுங்க பிளிஸ்..! அப்பா இனி உங்களை எப்படி பார்ப்பேன்..! வார்னே மகள் உருக்கமான பதிவு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே மரணமடைந்த நிலையில், அவரது நினைவாக அவரது செல்ல மகள் சம்மர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

52 வயதான வார்னே, தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்ற நிலையில் காலமானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வார்னே மகள் வெளியிட்டுள்ள பதிவில், தந்தையின் நினைவில் வாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எப்போது கேட்பேன்

எப்போது கேட்பேன்

இது எல்லாம் கனவு, தனது தந்தைக்கு ஒன்றும் இல்லை என்று யாராவது என்னிடம் சொல்ல மாட்டார்களா? இது உண்மையாக இருக்க கூடாது. வாழ்க்கை இவ்வளவு கொடூரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இனி உங்களுடைய மெல்லிய குரலை நான் என்று கேட்பேன். செல்லம் எல்லாம் சரி ஆயிடும் என்று நீங்கள் சொல்வதை இனி நான் எப்போது கேட்பேன்.

கடைசி சந்திப்பு

கடைசி சந்திப்பு

இனி நீங்கள் சொல்லும் குட் மார்னிங், குட் நைட்டை நான் எப்படி கேட்பேன். கடைசியாக உங்களை பார்த்த நிகழ்வு என் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும். கடைசியாக நாம் சேர்ந்து ஒன்றாக பாடலுக்கு ஆடினோம். அப்போது தான் உங்களை நான் கடைசியாக பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை அப்பா.

இறுதி மூச்சு

இறுதி மூச்சு

உங்களுடைய சிரிப்பை கேட்க, மீண்டும் உங்களின் குரலை கேட்க, மீண்டும் நீங்கள் என்னை பாசத்துடன் அரவணைக்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன். நீங்கள் இறுதி மூச்சு விடும் போது உங்கள் கையை பிடித்து கொண்டு எல்லாம் சரி ஆயிடும். எனக்கு உங்களை பிடிக்கும் அப்பா என்று என்னால் சொல்ல முடியவில்லையே.

Recommended Video

அறை முழுவதும் ரத்தக் கறைகள்.. Shane Warne மரணத்தில் மர்மம்?
மீண்டும் வருவேன்

மீண்டும் வருவேன்

நான் உங்களுடன் இருந்திக்க கூடிய நேரம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. மீண்டும் என்னுடன் வாருங்கள் அப்பா.. நான் சாகும் வரை என் இதயத்தில் என்றும் நீங்கள் இருப்பீர்கள் அப்பா. உங்கள் நினைவு என்றும் இருக்கும். உங்களை காண, உங்களை தேடி நான் வருவேன் உங்களை நான் பெருமைப்படுத்துவேன். நீங்கள் எப்படி இருந்தாலும், நீங்கள் தான் என் தந்தை. லவ் யூ டாடி..

Story first published: Tuesday, March 8, 2022, 17:34 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+