Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீட் பெல்ட் போடலையே.. ஷான் வார்னே, கெவின் பீட்டர்சனுக்கு ஃபைன் போட்ட போலீஸ்!

சிட்னி: சீட் பெல்ட் போடாமல் காரில் பயணித்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் வார்னே மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆகியோருக்கு சிட்னி போலீஸார் அபராம் விதித்தனர்.

ஆளுக்கு 300 டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷான் வார்னே தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில், காரின் முன்பக்கம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் மற்றும் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி ஆகியோர் இருந்தனர். டெய்லர் காரை ஓட்டி வந்தார்.

Shane Warne, Kevin Pietersen fined $300 each by police

பின் பக்க இருக்கையில் வார்னேவும், கெவின் பீட்டர்சனும் பயணித்தனர். முன்னாள் இருந்த டெய்லரும், ஹீலியும் சீட் பெல்ட் போட்டிருந்தனர். ஆனால் வார்னே, பீட்டர்சன் ஆகியோர் போட்டிருக்கவில்லை. அதேபோல மைக்கேல் ஸ்லாட்டரும் சீட் பெல்ட் போடாமல் உட்கார்ந்திருந்தார். அனைவரும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளர்களாக இருந்தனர்.

அவர்களது காரை தடுத்து நிறுத்திய போலீஸார் சீட் பெல்ட் போடாத வார்னே, கெவின் பீட்டர்சன்,ஸ்லாட்டர் ஆகியோருக்கு தலா 300 டாலர் அபராதம் விதித்தனர்.

Story first published: Tuesday, November 22, 2016, 16:24 [IST]
Other articles published on Nov 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+