Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க தான் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..!! ஆஸி. வீரர் வார்னே கருத்து

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னர், கிரிக்கெட் உலகின் கருத்து கந்தசாமியாக வலம் வருபவர்

Recommended Video

இவங்க தான் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்..!! ஆஸி. வீரர் வார்னே கருத்து

எப்போதும், எதையாவது பற்றி கருத்து சொல்லி கொண்டே இருப்பார். தற்போது வார்னே நடப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் டாப் 5 என்று கருத்து கூறியுள்ளார்.

அதில் இந்திய வீரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தற்போது காணலாம்..

ஸ்மித்

ஸ்மித்

தற்போது டெஸ்ட்டில் டாப் நம்பர் 1 என்ற பேட்ஸ்மேன் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தான். அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அனைத்து சூழலிலும் ரன்கள் அடிக்க கூடியவர் ஸ்மித் தான். அவருடைய பேட்டிங் நுணுக்கங்கள் எல்லாம் சிறந்தது என்று வார்னே பாராட்டினார்

ஜோ ரூட்

ஜோ ரூட்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்க்கு வார்னே 2வது இடத்தை அளித்துள்ளார். நடப்பாண்டில் ஜோ ரூட் நல்ல பார்மில் இருந்ததாகவும், கடினமான இலங்கை, இந்தியா சூழலில் சதம் விளாசி அசத்தி இருப்பதாகவும் பாராட்டினார். நடப்பாண்டில் ஜோ ரூட் 6 சதம் விளாசியதன் மூலம் அவர் 2வது இடத்தில் இருப்பதாக வார்னே கூறினார்

வில்லியம்சன்

வில்லியம்சன்

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனுக்கு 3வது இடத்தை தந்துள்ளார் வார்னே. தற்போது கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் வில்லியம்சன் என்று பாராட்டிய அவர், வில்லியம்சன் பெரிய ரன்களை குவிப்பதில் வல்லவர் என்று பாராட்டினார்.

விராட் கோலி

விராட் கோலி

இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அவர் 4வது இடத்தையே தந்துள்ளார். விராட் கோலியின் ஆட்டம் சமீப காலமாக தொய்வாக இருப்பதாக குறிப்பிட்ட வார்னே, இருப்பினும் டாப் 5 இடத்தை பிடிக்கும் அளவிற்கு அவர் சிறந்த வீரர் தான் என்று பாராட்டினார். இருப்பினும் தனது பட்டியலில் அவர் சரிவையே கண்டுள்ளதாக குறிப்பிட்டார்

மார்னஸ் லாபஸ்சேங்

மார்னஸ் லாபஸ்சேங்

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள மார்னஸ் லாபஸ்சேங்கிற்கு 5வது இடத்தை வார்னே தந்துள்ளார். 19 டெஸ்டில் 2 ஆயிரம் ரன்கள் குவித்திருப்பதன் மூலம் அவரது திறமை அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று வார்னே கூறினார். வார்னேவில் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு இடம் அளிக்கப்படாததற்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, December 11, 2021, 19:45 [IST]
Other articles published on Dec 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+