Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னேவுக்காக கூடும் 1 லட்சம் ரசிகர்கள்.. இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு.. ஆஸி. கிரிக்கெட் ஏற்பாடு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே கடந்த 4ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாய்லாந்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது. வார்னேவின் மரணத்தில் மர்மம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இதில் வார்னேவில் உயிரிழப்பு இயற்கையானது தான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளத. மேலும் வார்னேவின் உடலில் எந்த காயங்களோ, இல்லை மது, போதை பொருட்களோ அவர் எடுத்து கொள்ளவில்லை என்று பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி சடங்கு

இறுதி சடங்கு

வார்னேவின் உடல் இன்று ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. வார்னேவின் உடல் வரும் 19ஆம் தேதி அடக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் தான் கலந்து கொள்ள உள்ளனர்.

நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி

இதனைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது மைதானத்தில் உள்ள ஜி கேலரிக்கு வார்னேவின் பெயர் சூட்டப்பட உள்ளது. வார்னேவுக்கு மெல்போர்னில் ரசிகர்கள் பிரியாவிடை அளிக்க உள்ளனர்.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil
மெல்போர்ன் ஏன்?

மெல்போர்ன் ஏன்?

மெல்போர்னில் தான் வார்னே 1994ஆம் ஆண்டு ட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் பின்னர் தனது கடைசி டெஸ்டையும் மெல்போர்னில் தான் வார்னே விளையாடினார். தனது 700வது டெஸ்ட் விக்கெட்டையும் வார்னே அங்கு தான் வீழ்த்தினார். இதனால் , மெல்போர்னில் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

Story first published: Wednesday, March 9, 2022, 17:40 [IST]
Other articles published on Mar 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+