Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னேயின் ஆல்-டைம் பெஸ்ட் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் டீமில் லட்சுமணனுக்கு இடமில்லை!

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்னே, இந்திய டெஸ்ட் கனவு அணி ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆனால், அதில் வி.வி.எஸ்.லட்சுமணனுக்கு 12வது இடம்தான் கிடைத்துள்ளது. ஆடும் 11 பேர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

வார்னே தனது பேஸ்புக் பக்கத்தில், இப்பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 6வது இடத்தில் களமிறங்குவதற்கான வீரர்களில் எனது அருமை நண்பர் லட்சுமணன் அல்லது அசாரூதீன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு தரலாம் என நினைத்தேன்.

தீவிர யோசனைக்கு பிறகு அவ்விடத்தை அசாருக்கு கொடுத்ததால், லட்சுமணனுக்கு 12வது இடம்தான் தர முடிந்தது என்று வார்னே கூறியுள்ளார்.

அதிரடி ஓபனிங்

அதிரடி ஓபனிங்

வார்னே அணியில் வீரேந்திர சேவாக் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் ஓபனர்களாக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். சேவாக் 104 டெஸ்டுகளும், சித்து 51 டெஸ்டுகளும் ஆடியுள்ளனர்.

டிராவிட்டுக்கு பின் கங்குலி

டிராவிட்டுக்கு பின் கங்குலி

ஒன்-டவுன் பேட்ஸ்மேனாக ராகுல் டிராவிட் களமிறங்கவும், அடுத்ததாக சச்சின் களமிறங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார் வார்னே. இதில் 5வது இடம் சவுரவ் கங்குலிக்கு.

அசார், கபில்தேவ்

அசார், கபில்தேவ்

6வது இடத்தில் அசாருதீனும், அதற்கு அடுத்த இடத்தில் கபில்தேவும், 8வது இடத்தில் டோணியும் களமிறங்க வார்னே விருப்பம் தெரிவித்துள்ளார்.

கும்ப்ளே, ஸ்ரீநாத்

கும்ப்ளே, ஸ்ரீநாத்

9வது இடத்தில் அனில் கும்ப்ளே, 10வது இடத்தில் ஹர்பஜன்சிங், 11வது இடத்தில் ஜவகல் ஸ்ரீநாத் களமிறங்க வார்னே விருப்பம் தெரிவித்துள்ளதோடு, தனது பட்டியல் பற்றி பேஸ்புக்கில் கமெண்ட் எழுதவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் பலரும் முன்னாள் கேப்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய கஷ்டம்

பெரிய கஷ்டம்

வெங்சர்க்கார், மனோஜ் பிரபாகர், ரவி சாஸ்திரி, ஜாகீர் கான் ஆகியோருடனும் நான் ஆடியுள்ளேன். இருப்பினும் இந்த 12 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுப்பதற்குள்ளேயே நான் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன் என்று வார்னே கூறியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியை லட்சுமணனும், டிராவிட்டும் இணைந்து ஆஸி. கையில் இருந்து இந்தியா பக்கம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 16, 2015, 13:37 [IST]
Other articles published on Dec 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+