Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னே! இது உங்களுக்கே ஓவரா இல்ல! டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா?

மும்பை : ஐபிஎல் 2௦19 தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வார்னே தன் பணிகளை மும்முரமாக துவக்கி உள்ளார்.

தன் அணிக்கு விளம்பரம் செய்ய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தன் அணி வீரர் பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் ஐபிஎல் தொடர் நாயகனாக வருவார் எனக் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார்.

சர்வதேச அனுபவம்

சர்வதேச அனுபவம்

காரணம், இவர் கூறும் வீரர் அதிக சர்வதேச அனுபவம் இல்லாதவர். கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்தாலும், தற்போது டாப் பார்மில் இருக்கிறார் என கூறி விட முடியாது. அப்படி யாரை சொல்லி இருக்கிறார் வார்னே?

தொடர் நாயகன்

ஷேன் வார்னே தன் பதிவில் ஐபிஎல் 2019 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் கோப்பை வெல்லும். மேலும், சஞ்சு சாம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என நான் நினைக்கிறேன் எனக் கூறி இருக்கிறார்.

15வது இடம்

15வது இடம்

சஞ்சு சாம்சன் முன்னணி ஐபிஎல் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 15வது இடத்தையே பிடித்துள்ளார்.

சராசரி என்ன?

சராசரி என்ன?

கடந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 441 ரன்கள் குவித்தார். மூன்று அரைசதம் அடித்து இருந்தார். இவரது பேட்டிங் சராசரி 31.50 ஆக இருந்தது. ஒட்டு மொத்த ஐபிஎல் சராசரி 26.67 ஆகும்.

அதிரடி வீரர்கள் உள்ளனர்

அதிரடி வீரர்கள் உள்ளனர்

சஞ்சு சாம்சன்-ஐ விட இளம் வீரர்கள் பலர் அதிரடி காட்ட தயாராக உள்ளனர். அது போல அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பலரும் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு சிறப்பாக ஆடிய வீரர்கள் வரிசையில் பலர் இருக்கும் நிலையில், ஷேன் வார்னே தன் அணியை சேர்ந்த வீரரை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இருக்கிறாரா?

அதிரடியாக ஆடுவாரா?

அதிரடியாக ஆடுவாரா?

ராஜஸ்தான் அணியில் கூட ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சமீபத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்த ஆஷ்டன் டர்னர் என பல அதிரடி வீரர்கள் உள்ளனர். சஞ்சு சாம்சன், ஷேன் வார்னே கூறும் அளவுக்கு ஆடுவாரா?

Story first published: Tuesday, March 12, 2019, 16:52 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+