ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஷான் வார்ன்

இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த சீசனிலிருந்து தான் விளையாடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வார்ன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெற்ற வார்ன், பின்னர் ஐபிஎல்லி்ல ஆட வந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த நான்கு ஐபிஎல் தொடர்களாக செயல்பட்டு வருகிறார். இதில் ஒருமுறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
வயதாகியும் கூட இன்னும் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார் வார்ன். இதனால் அவரது ஓய்வு முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோரும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் அதை மறு பரிசீலனை செய்ய முடியாது என்று ஏற்கனவே வார்ன் கூறி விட்டார்.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரோடு ஆடுவதிலிருந்து விலகி விட வார்ன் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த தொடரில் நான் விளையாட மாட்டேன். நடப்புத் தொடரில் அடுத்து ஆடவுள்ள சில போட்டிகளே நான் கடைசியாக ஆடும் ஐபிஎல் போட்டிகளாக இருக்கும் என்று கூறினார் வார்ன்.
ஆடுவதிலிருந்து வார்ன் விலகி விட்டாலும் கூட அடுத்த சீசன் முதல் அவர் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications