Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வார்னேவின் அடாப்சி ரிப்போர்ட்.. மரணத்திற்கான உண்மை காரணம் வெளியானது.. போலீசார் அடுத்த நடவடிக்கை

தாய்லாந்து: ஷேன் வார்னே எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த இறுதிகட்ட அறிக்கையை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்தார்.

முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்தவர் எப்படி திடீரென உயிரிழந்தார் என அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.

நீடித்து வந்த மர்மம்

நீடித்து வந்த மர்மம்

தாய்லாந்து நாட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்த வார்னே அறையில் எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்ததாகவும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. எனினும் அவர்களின் 3 நண்பர்களின் மீது சந்தேகப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அறையில் ரத்தக் கறைகள்

அறையில் ரத்தக் கறைகள்

ஏனென்றால் வார்னே தங்கியிருந்த அறையின் பல இடங்களில் ரத்தக்கறைகள் இருந்தன. மேலும் அவர் பயன்படுத்திய தலையணை, குளியல் டவல் ஆகியவற்றிலும் ரத்தங்கள் படிந்திருந்தன. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதலுதவி வழங்கியபோது ஷேன் வார்னே ரத்த வாந்தி எடுத்ததாக நண்பர்கள் வாக்கு மூலம் அளித்திருந்தனர்.

இறுதி அறிக்கை

இறுதி அறிக்கை

இந்நிலையில் அனைவரின் சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. அவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடாப்சி ரிப்போர்டை வழங்கியுள்ளனர். அதில் வார்னே இயற்கை முறையில் தான் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடலில் எந்தவித காயங்கள் இல்லையென்றும், ரத்த வாந்தி எடுத்ததால் தான் அறையில் ரத்தக்கறை இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

அறை முழுவதும் ரத்தக் கறைகள்.. Shane Warne மரணத்தில் மர்மம்?
பாங்காக் செல்லும் உடல்

பாங்காக் செல்லும் உடல்

இதனையடுத்து இந்த வழக்கில் தாய்லாந்து போலீசார் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். இனி வார்னேவின் உடலை பாங்காக்கிற்கு கொண்டு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் எனக்கூறப்படுகிறது. அங்கு அவரின் உடலை அஞ்சலிக்கு வைக்கும் பணிகளில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும், அரசும் ஈடுபட்டு வருகிறது.

Story first published: Monday, March 7, 2022, 16:52 [IST]
Other articles published on Mar 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+