Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா சென்றது வார்னேவின் உடல்.. கண்ணீர் விட்டு கதறிய தாயார்.. மனம் உருக வைக்கும் புகைப்படங்கள்

ஆஸ்திரேலியா: ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த வாரம் ( மார்ச் 4ம் தேதி) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

3 நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்தில் உள்ள கோ சாமூய் தீவுக்கு சென்றிருந்த வார்னே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

விசாரணை முடிவு

விசாரணை முடிவு

இதனையடுத்து அவரின் மரணம் குறித்து கடந்த ஒரு வார காலமாக தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரின் அறை புகைப்படங்கள், கடைசியாக அவரின் அறைக்கு வந்த 4 பெண்கள் உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில் அடாப்சி ரிப்போர்ட்டில் வார்னே இயற்கையாக தான் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனி விமானம்

தனி விமானம்

இதனால் வார்னேவின் வழக்கை முடித்த தாய்லாந்து போலீசார் நேற்று பாங்காக்கில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உடலை அனுப்பி வைத்தனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் நேரில் சென்று, தனி விமானம் மூலம் ஷேன் வார்னேவின் உடலை கொண்டு வந்தனர்.

தாயாரின் கண்ணீர்

தாயாரின் கண்ணீர்

உடலை வாங்குவதற்காக விமான நிலையத்திற்கு வார்னேவின் மகன் ஜாக்சன், மனைவி, தாயார் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க காத்திருந்தனர். குறிப்பாக உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்ததும் வார்னேவின் தாயார் உணர்ச்சிவசப்பட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் அவரது மகன் கண்ணீர் மல்க ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil
இறுதி மரியாதை

இறுதி மரியாதை

ஆஸ்திரேலிய தேசிய கொடி போர்த்தப்பட்ட வார்னேவின் உடல் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும். மேலும் வார்னே தனது 700வது விக்கெட்டை எடுத்த புகழ்பெற்ற எம்சிஜி மைதானத்தில் இறுதி மரியாதை கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, March 11, 2022, 10:11 [IST]
Other articles published on Mar 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+