Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வார்னேவின் “கடைசி புகைப்படம்” ..!! நெருங்கிய நண்பர் வெளியிட்ட பதிவு.. கண்ணீர் விடும் ரசிகர்கள்

தாய்லாந்து: மறைந்த ஷேன் வார்னேவின் கடைசி புகைப்படத்தை அவரது நெருங்கிய நண்பர் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த பிப் 4ம் தேதியன்று தாய்லாந்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உலகின் பல கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் வார்னேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசி நிமிடங்கள்

கடைசி நிமிடங்கள்

நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என தீவிர டயட் இருந்துள்ளார். வயதுக்கு அதிகமான உடற்பயிற்சி என்பதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். எனினும் அதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

 சிரித்த முகம்

சிரித்த முகம்

இந்நிலையில் வார்னே எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தை அவரது நண்பர் வெளியிட்டுள்ளார். தாமஸ் ஹால் என்பவர் வார்னேவுடன் தங்கியிருந்தவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேன் வார்னே கடைசியாக சிரித்த முகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதன் பிறகு தான் வார்னே உயிரிழந்துள்ளார். வார்னே சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அடாப்சி ரிப்போர்ட்டில் விளக்கம்

அடாப்சி ரிப்போர்ட்டில் விளக்கம்

ஷேன் வார்னேவின் அறையில் பல இடங்களில் ரத்தக்கறைகள் இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனினும் அது முதலுதவி அளிக்கப்பட்ட போது, ரத்த வாந்தி எடுத்தார் என அவரது நண்பர்கள் வாக்குமூலம் அளித்தனர். மேலும் மருத்துவர்களின் அடாப்சி ரிப்போர்டிலும் இயற்கையாக தான் வார்னே இறந்துள்ளார் என உறுதிகொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil
பாங்காக்கிற்கு மாற்றம்

பாங்காக்கிற்கு மாற்றம்

இதனையடுத்து வழக்கை முடித்த போலீசார், இன்று அல்லது நாளைக்குள் வார்னேவின் உடலை பாங்காக்கிற்கு கொண்டு செல்லவுள்ளனர். அங்கிருந்து ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் உடலை பெற்றுக்கொள்வார்கள். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எம்.சி.ஜி மைதானத்தை பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Story first published: Tuesday, March 8, 2022, 12:43 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+