Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் முதல் கோப்பையை வென்ற வார்னே.. இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை.. 3 பொறுப்பு ஒரு கோப்பை

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே மாரடைப்பால் இன்று உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Shane Warne இளம் வீரர்களை வைத்து சாதித்த கதை | IPL | Oneindia Tamil

வார்னே இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் வார்னே செய்த சாதனை தான்.

இன்று நமக்கு கிடைத்த ஜடேஜா, யூசுப் பதான், வாட்சன் என அனைவரும் வார்னேவின் பயிற்சி பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான்.

ராயல்ஸ் ஒப்பந்தம்

ராயல்ஸ் ஒப்பந்தம்

2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வார்னேவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. சென்னைக்கு தோனி, டெல்லிக்கு சேவாக், மும்பைக்கு சச்சின், ஐதராபாத்துக்கு கில்கிறிஸ்ட், பஞ்சாப்க்கு யுவராஜ் என ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருந்தன.

3 பொறுப்பு

3 பொறுப்பு

ஆனால் வார்னே தலைமையிலான அணியின் குறிப்பிட்டு சொல்லும் அளவு எந்த வீரரும் இல்லை. ராஜஸ்தான் அணி எல்லாம் சுத்த வேஸ்ட் என்று வெளிப்படையாக பலரும் கருத்து தெரிவித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கேப்டனாகவும், பயிற்சியாளராகவும், பந்துவீச்சாளராகவும் ஒரே ஆளாக வார்னே களமிறங்கினார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

வார்னேவின் பயிற்சியில், ராஜஸ்தான் அணி ஜாம்பவான்கள் அணியை துவைத்து போட்டது. ஜடேஜா, யூசுப் பதான் போன்ற வீரர்களை அடையாளப்படுத்திய வார்னர், அவர்களை வேற ஒரு தளத்துக்கு கொண்ட சென்றார். வாட்சனுக்கு பேட்டிங்கும் தெரியும் என்று உணர வைத்தவர் வார்னே தான்.

முதல் சாம்பியன்

முதல் சாம்பியன்

அப்போது யாருமே எதிர்பாராத ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதியது. இதில் கனவில் யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள், ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்று..!! கோப்பையை வாங்கிய வார்னே, ஜடேஜாவை ஒரு ராக் ஸ்டார் என்று பாராட்டினார். அது உண்மையாகிவிட்டது. வார்னேவை, அப்போது 2011 உலககோப்பைக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

Story first published: Friday, March 4, 2022, 22:29 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+