சச்சின் Vs வார்னே – மறக்க முடியாத ஆட்டங்கள்.. இருவரையும் அழைத்து பாராட்டிய டான் பிராட்மேன்
மெல்போர்ன் : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே, தனது 52 வது வயதில் காலமானார்.
Recommended Video
தாய்லாந்தில் சுற்றுலா சென்ற நிலையில் வார்னே உயிரிழந்துள்ளது, ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், உலகின் முன்னணி பந்துவீச்சாளரும், முன்னணி பேட்ஸ்மேனும் மோதி கொண்ட போட்டிகளை தற்போது காணலாம்.

சிட்னி 1992
ஆஸ்திரேலிய வீரர் வார்னே சிட்னியில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3வது ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த ஆட்டத்தில் வார்னேவை அடித்து தும்சம் செய்தார் சச்சின். இந்த ஆட்டத்தில் சந்நின் 148 ரன்கள் குவித்தார். ஆனால் வார்னே அதன் பின்னர் தான் தாம் ஒரு ஜாம்பவான் என்பதை உலகிற்கு காட்டினார்.

1996 உலககோப்பை
1996ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் சச்சின் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மெக்ராத் ஓவரை விட்டு விளாசிய சச்சின், வார்னே ஓவரை அடிக்க முடியாமல் திணறினார். அந்த ஆட்டத்தில் சச்சின் 90 ரன்கள் அடிக்க வார்னே 10 ஓவர் வீசி 28 ரன்கள் மட்டுமே அடித்தார்.

சென்னை 1998
1998ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வார்னேவின் அபார பந்துவீச்சால் இந்தியா 257 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் வார்னேவில் யுத்தியை கண்டு பிடித்த சச்சின், 2வது இன்னிங்சில் அவரது பந்துவீச்சை பிரித்து மெய்ந்தார். 191 பந்துகளில் சச்சின் 155 ரன்கள் விளாசினார். அதுவரை டெஸ்ட்டில் வார்னேவை அப்படி யாரும் அடித்தது இல்லை.

பிராட்மேன் சந்திப்பு
கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன், அப்போதைய சிறந்த கிரிக்கெட் வீரர்களாக விளங்கிய சச்சின், வார்னேவை தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்தார். வார்னே தாம் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன் என்றால் சச்சின் என்றும்,சச்சின் வார்னே சிறந்த பவுலர் என்றும் பாராட்டி இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் டி20 தொடர், லண்டனில் கண்காட்சி ஆட்டங்கள் என பல்வேறு போட்டிகளில் நட்பு பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
